
முதலீட்டை மோசடி செய்ததாக GROWW தளத்தின் மீது குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
இந்தியா: நிதிச் சேவை தளமான Groww, தனது முதலீட்டை ஏமாற்றயுள்ளதாக ஒரு வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
Groww இல்லாத ஃபோலியோ எண்ணை உருவாக்கியதாகவும், தனது முதலீட்டின் வளர்ச்சியை தவறாகக் குறிப்பிட்டதாகவும் அந்த பயனர் கூறியுள்ளார்.
அதை மீட்டெடுக்க முயற்சித்தபோது, ஃபோலியோ எண் இல்லை என்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து Growwவை அவர் தொடர்பு கொண்டபோது, அவரது டேஷ்போர்டிலிருந்து அனைத்து விவரங்களும் அகற்றப்பட்டதாகவும், வாடிக்கையாளர் பராமரிப்பு அதிகாரிகள் அந்தத் தொகை சரியாக முதலீடு செய்யப்படவில்லை என்று கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சன அலைக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்ட Groww நிறுவனம் இதை முற்றிலுமாக மறுத்துள்ளது.
இந்தியா
பிரச்சினை தீர்ந்துவிட்டதாக வாடிக்கையாளர் தகவல்
இதற்கிடையில், முதலில் இந்த குற்றச்சாட்டுகளை Groww மீது சுமத்திய அந்த வாடிக்கையாளர் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு புது இடுகையை வெளியிட்டுள்ளார்.
அதில் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"இந்த இடுகை சரியான நபர்களைச் சென்றடைந்துள்ளது. சரியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து ஆதரவு மற்றும் உதவிக்கு நன்றி" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டபோதிலும், Growwவின் நம்பத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களுடனான அதன் வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகள் இன்னும் உள்ளன.