இந்தியாவின் மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனத்தின் மூன்றாவது சோதனை வெற்றி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) இன்று மூன்றாவது மறுபயன்பாட்டு ஏவுகணை (RLV) தரையிறங்கும் பரிசோதனையை (LEX) வெற்றிகரமாக நடத்தியது. RLV LEX-03 என அழைக்கப்படும் இந்த பணியானது, கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் (ATR) நடத்தப்பட்டது. RLV LEX-03 பணியானது மிகவும் சவாலான வெளியீட்டு நிலைமைகள் மற்றும் கடுமையான காற்று நிலைகளின் கீழ் RLV இன் தானியாக்க தரையிறங்கும் திறனை நிரூபித்தது. புஷ்பக் என்று பெயரிடப்பட்ட இறக்கைகளை கொண்ட இந்த வாகனம், இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிமீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. RLV-LEX-03 வாகனத்தின் இறக்கைகள் ஏற்கனவே LEX-02 மிஷனில் பயன்படுத்தபட்டதாகும். எனவே, மீண்டும் அதை உபயோகித்து இஸ்ரோ தனது வடிவமைப்பு திறனின் வலிமையை நிரூபித்துள்ளது.
RLV LEX-03 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது
🇮🇳@DRDO_India achieved its third and final consecutive success in the Reusable Launch Vehicle (RLV) Landing EXperiment (LEX) on June 23, 2024. "Pushpak" executed a precise horizontal landing, showcasing advanced autonomous capabilities under challenging conditions. @IAF_MCC pic.twitter.com/kc8bwjxPRO— SansadTV (@sansad_tv) June 23, 2024