மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்
18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்க்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பொதுவாக சபாநாயகர் பதவி நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினருக்குச் செல்லும் என்பதால், பர்த்ருஹரி மஹ்தாப் என்பர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு ஏற்கனவே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 7 முறை எம்.பி.யாக இருந்தவர பர்த்ருஹரி மஹ்தாப் ஆவார். எனவே, அவரது பதியேற்புக்கு எதிர்கட்சிகளிடம் பெரும் எதிர்ப்பு இருந்த போதிலும் அவர் தற்போது பதவியேற்றுள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் மஹ்தாப்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று தொடங்கும் மக்களவை கூட்டத் தொடருக்கு மஹ்தாப் தலைமை தாங்க உள்ளார். மேலும், இன்று நடைபெறும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கான பதவியேற்பு விழாவை அவர் மேற்பார்வையிடுவார்.
பாஜக அரசு விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு
தலித் தலைவரும், கேரளாவில் இருந்து 8 முறை எம்.பி.யாக வென்றவருமான கொடிக்குன்னில் சுரேஷ் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், அது நடக்கவில்லை. எனவே, மஹ்தாப் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் பாஜகவை விமர்சித்துள்ளது. பொதுவாக சபாநாயகர் பதவி நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினருக்குச் செல்லும் என்பதால், பர்த்ருஹரி மஹ்தாப் என்பர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டதற்கு ஏற்கனவே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பாஜக தலைமையிலான அரசு நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி, சபாநாயகர் நியமனத்தை அரசியலாக்குவதாக ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மக்களவையின் முதல் சில அமர்வுகளுக்கு இடைக்கால சபாநாயகர் தலைமை தாங்க உள்ளார்.