பீகாரில் இடிந்து விழுந்தது மற்றொரு பாலம்: ஒரே வாரத்தில் 2 பாலங்கள் தரைமட்டம்
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலம் சிவான் பகுதியில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
கந்தக் கால்வாயின் மேல் உள்ள பாலம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட பெரும் சத்தம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ராம்கர் வரை கேட்டது.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பாலம் இடிந்து விழுந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள படேதி பஜாரின் சந்தைகளை தர்பங்காவில் உள்ள ராம்கர் பஞ்சாயத்துடன் இணைக்கும் இந்த பாலத்தில், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஒரு முக்கிய இணைப்பாக செயல்பட்டது.
இந்தியா
கண்டக் கால்வாயை தாண்ட முடியாமல் மக்கள் தவிப்பு
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் வளர்ச்சியின் போது கட்டப்பட்ட இந்த பழமையான பாலம் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு அரசாங்க அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தினால் கண்டக் கால்வாயை தாண்டி போக முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
பக்ரா ஆற்றின் மீது கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்தையும் ட இந்த கான்கிரீட் பாலம் சில நொடிகளில் உடைந்து போனது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது
பீகாரின் அராரியாவில் இதேபோன்ற ஒரு சம்பவம் சில நாட்களுக்குப் முன் நடந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பலம் இடிந்து விழும் வீடியோ
VIDEO | Bihar: A bridge between Patedha and Garauli villages of Siwan district collapsed earlier today.
— Press Trust of India (@PTI_News) June 22, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/pfWpHfCN0y