Page Loader
கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jun 23, 2024
03:35 pm

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வரும் செவ்வாய்கிழமை(ஜூன் 25) வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பழம்பெரும் நடிகர் கமல்ஹாசனும் மூத்த திரைப்பட இயக்குநரான ஷங்கருக்கும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் 2வது பாகம் இதுவாகும். சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணுவின் கடைசி திரைப்படங்கள் இதுவாகும். ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக அனிருத் ரவிச்சந்தர் இப்படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோலிவுட் 

ஜூலை 12 ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2

இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வழக்கமான அப்டேட்கள் மூலம் படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தியன் 2 படம் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்தியன் முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், தர சிக்கல்கள் காரணமாக இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தியன் முதல் பாகம் தற்போது ஆஹா தமிழ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் OTTplay பிரீமியம் போன்ற OTT தளங்களில் கிடைக்கிறது.