Page Loader

இந்தியா: செய்தி

10 May 2023
கர்நாடகா

இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் 

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெளியாகும் இறுதி கருத்துக் கணிப்புகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம் 

ஒரே பாலின திருமணங்களுக்கான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று(மே 9), திருமணம் செய்துகொள்ள அடிப்படை உரிமை உள்ளதா, இல்லையா என்று கேள்வி எழுப்பியது.

மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு 

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தக்ஷா என்ற பெண் சிறுத்தை மற்ற சிறுத்தைகளுடன் ஏற்பட்ட சண்டையால் இன்று(மே 9) உயிரிழந்தது.

09 May 2023
உலகம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் தீபக் போரியா, நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி!

செவ்வாயன்று (மே 9) தாஷ்கண்டில் நடந்த குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் 2023 இல், இந்தியாவின் தீபக் போரியா, ஆடவர் 51 கிலோ பிரிவில், சீனாவின் ஜாங் ஜியாமாவோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

09 May 2023
தமிழ்நாடு

மோக்கா புயல்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

09 May 2023
கலவரம்

மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம் 

மணிப்பூரில் கடந்த வாரம் நடந்த கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தது 62 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து: மத்தியப் பிரதேசத்தில் 22 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் உள்ள ஒரு பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்ததால் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

09 May 2023
கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 1,331 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-8) 1,839ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,331 ஆக குறைந்துள்ளது.

09 May 2023
மோடி

தேர்தலுக்கு முன் கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

09 May 2023
கர்நாடகா

கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள்

1978 மற்றும் 2018க்கு இடைப்பட்ட 40 ஆண்டுகளில், கர்நாடக சட்டசபைக்கு 62 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

09 May 2023
தமிழ்நாடு

மே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகும் மோக்கா புயல், வரும் வெள்ளிக்கிழமைக்குள் மிகக் கடுமையான புயலாகத் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்தார் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, "வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக" சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை செய்துள்ளது.

08 May 2023
விமானம்

'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ் 

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, டிக்கெட்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

08 May 2023
காங்கிரஸ்

சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக

காங்கிரஸ் மற்றும் அதன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடிதம் எழுதியுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி

தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மூன்று FIRகளையும் இணைக்கக் கோரிய யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று(மே 8) தள்ளுபடி செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

மே 18 முதல் அடிலெய்டில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஹாக்கி போட்டிகள் கொண்ட தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா திங்கட்கிழமை (மே 8) அறிவித்தது.

08 May 2023
டெல்லி

திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்

திகார் சிறையில் தில்லு தாஜ்பூரியா குத்திக் கொல்லப்பட்ட போது, அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர்கள்(TNSP) 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்கிறதா? தெரிந்து கொள்வது எப்படி!

இந்தியாவில் அரசு சேவைகளைப் பெற நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அடையாள அட்டையை வழங்கியது இந்திய அரசு.

08 May 2023
கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 1,839 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-7) 2,380ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,839 ஆக குறைந்துள்ளது.

08 May 2023
வணிகம்

அரசின் ONDC தளத்திலும் உணவு டெலிவரி சேவை.. என்னென்ன பின்னடைவுகள்?

ONDC தளத்தின் மூலம் உணவு டெலிவரி சேவையும் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ONDC என்பது ஒரு இணைய வணிகத் தளம். இதனால் நமக்கு என்ன பயன்?

இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு

கடந்த வாரம் இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் போயிங் 777 ஜெட்லைனர் விமானத்தால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது.

08 May 2023
பஞ்சாப்

அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு

பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவில் இன்று(மே 8) காலை இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

08 May 2023
ராஜஸ்தான்

ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி 

ராஜஸ்தானில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானப்படையின் MIG-21 போர் விமானம் மோதியதால் 3 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

08 May 2023
இந்தியா

"இந்தியா முன்னோடியாகத் திகழ வேண்டும்".. ICANN சிஇஓ சாலி காஸ்டெர்டன்!

Universal Acceptance-ல் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா செயல்பட வேண்டும் என ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பின் இடைக்கால சிஇஓ சாலி காஸ்டெர்டன் தெரிவித்துள்ளார்.

கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் மேலும் உயரும்: நிபுணர்கள்

இந்தியாவில் கடுமையான வெப்ப அலைகள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08 May 2023
கேரளா

கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி 

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று(மே 7) மாலை கடற்கரை அருகே இரட்டை அடுக்கு படகு கவிழ்ந்து மூழ்கியதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உயரமான மலைகளின் மடியில் அமைந்துள்ள செழிப்பான வயல்வெளிகள், ஆற்றின் நீரோடைகள் மற்றும் காட்டுப் பாதைகளுக்கு மத்தியில் கேரன் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு 

2023ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 11 இடங்கள் சரிந்து, 160வது இடத்தைப் பிடித்துள்ளது.

மே 06-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர்மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

05 May 2023
தமிழ்நாடு

தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை 

இந்தியா முழுவதுமே தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் கைகளில் உள்ள கைபேசி மூலமே கூகுள் பே, போன் பே போன்ற வசதிகள் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்து வருகிறது.

05 May 2023
தமிழ்நாடு

தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில், கடந்த ஆண்டில் ரூ.84.10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலின் சுவர்கள் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் இன்று(மே 5) சிதைக்கப்பட்டது.

05 May 2023
காவல்துறை

கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம் 

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் போரியா மாவட்டத்தில் சட்கி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

05 May 2023
பிரதமர்

'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு 

காங்கிரஸ் கட்சி வாக்குகளை பெறுவதற்காக பயங்கரவாதத்தின் முன் மண்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 5) குற்றம்சாட்டியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் மாட்ரிட் ஓபன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம் 

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தலைவர் பதவியில் இருந்து தான் விலக போவதாக சரத் பவார் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த ராஜினாமா இன்று(மே 5) ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

05 May 2023
டெல்லி

300 கி.மீ வேகத்தில் பைக் பயணம் செய்த யூடியூபர் மரணம் - பதபத வைக்கும் வைரல் வீடியோ! 

யூடியூபர் ஒருவர் 300 கிலோ மீட்டர் வேகத்தில் டெல்லி வழியே யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை பதக்கப்பட்டியல் : மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்த இந்தியா! 

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் சார்பில் எகிப்தில் நடந்த ஐஎஸ்எஸ்எப் ஷாட்கன் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா ஒரு தங்கத்துடன் பட்டியலில் மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்துள்ளது.

UPI சேவையை எளிதாக்கும் UPI Lite வசதி.. போன்பேயிலும் அறிமுகமானது!

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய யுபிஐ லைட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது போன்பே நிறுவனம்.