NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தலுக்கு முன் கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தலுக்கு முன் கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்
    இந்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக போராடி வருகிறது.

    தேர்தலுக்கு முன் கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்

    எழுதியவர் Sindhuja SM
    May 09, 2023
    12:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    கர்நாடகாவில் நாளை(மே 10) தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

    38 ஆண்டு ஆண்டுகால வழக்கத்தை உடைத்து, இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக போராடி வருகிறது.

    பாஜகவின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பெங்களூருவில் கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் மோடி 26 கிமீ ரோட்ஷோவை நடத்தினார்.

    கர்நாடகாவில் டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ், மற்றும் எச்டி குமாரசாமி தலைமையிலான ஜே.டி(எஸ்) கட்சி ஆகியவை முன்னணியில் உள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடி கர்நாடக மக்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

    details

    கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:

    தற்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.

    எங்களின் அடுத்த நோக்கம், அதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பதே ஆகும்.

    கர்நாடகா வேகமாக வளர்ந்து 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

    கடந்த 3.5 ஆண்டுகளாக இரட்டை எஞ்சின் கொண்ட பாஜக அரசின் வேலையை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

    எங்களின் தீர்க்கமான எதிர்கால கொள்கைகள் கர்நாடகாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கிறது.

    கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, ​​பாஜக அரசாங்கத்தின் கீழ் கர்நாடகா ஆண்டுதோறும் ₹ 90,000 கோடிக்கு மேல் அன்னிய முதலீட்டைப் பெற்றது.

    கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் கர்நாடகாவை நம்பர் 1ஆக மாற்ற நாங்கள் விரும்புகிறோம்.

    கர்நாடகாவின் ஒவ்வொரு குடிமகனின் கனவு தான் என் கனவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மோடி
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா

    இந்தியா

    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு  காவல்துறை
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது பாகிஸ்தான்
    ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!  ஏர் இந்தியா
    கபாப் உணவு பிடிக்கவில்லை என சமையல்காரரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்!  உத்தரப்பிரதேசம்

    மோடி

    இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள் இந்தியா
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் இந்தியா
    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு இந்தியா

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்தியா
    சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா
    பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ் வைரல் செய்தி
    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி டெல்லி

    நரேந்திர மோடி

    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    ஆஸ்கார் விருதுகள் 2023: விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆஸ்கார் விருது
    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025