Page Loader
தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே
பறக்கும் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் ரயில்வே நிர்வாகம்

தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே

எழுதியவர் Siranjeevi
May 05, 2023
06:12 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில், கடந்த ஆண்டில் ரூ.84.10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தினமும் 150 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது வேளச்சேரியையும், பரங்கி மலையையும் இணைக்கும் திட்ட பணிகளும் நடந்து வருகின்றன. எனவே, இந்த ரயிலில் பயணிக்க குறைந்த பட்ச கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பறக்கும் ரயில் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் 84 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆண்டு தோறும் தெற்கு ரெயில்வே இந்த பறக்கும் ரயில் சேவைக்கு 100 கோடி ரூபாய் செலவிடுகிறது.

ரயில் கட்டணம் 

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே செல்லும் ரயில் கட்டணம் உயருகிறது

ஆனால், கடந்த ஆண்டில் டிக்கெட் விற்பனை மூலம் தெற்கு ரயில்வேவுக்கு வெறும் ரூ. 17.25 கோடி ரூபாய் வருமானம் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் பறக்கும் ரயில் சேவையை தெற்கு ரயில்வேவிடம் இருந்து தமிழக அரசு கைப்பற்ற ஆலோசித்து வருகிறது. இந்த பெரிய இழப்பால், ரயில் நிலையங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் விலையை 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் ஆக விலையை உயர்த்த உள்ளனர். மேலும் தமிழக அரசு ரயிலை கையப்படுத்தினால் 150 ரயில் பெட்டிகளை வாங்கும். அதன் விலை ரூ.140 கோடி ரூபாய் ஆகும். இவை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிகழலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.