கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் போரியா மாவட்டத்தில் சட்கி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல் கிடந்த இடத்திலேயே அப்பெண்ணின் உடைகள், பைக்சாவி உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த அடையாளங்கள் மூலம் இறந்த கிடந்த பெண் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரியும் மாலோதி சோரன் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரது சகோதரியான ராணி சோரன் காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மாலோதிக்கும் தேலு என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக தேலுவுக்கும் வேறொரு பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளஉறவு இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.
கணவரை கைது செய்த காவல்துறை
இது குறித்து மாலோதிக்கு தெரியவந்த நிலையில் அவர் தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த மாதம் மாலோதி சண்டைபோட்டு கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேலுவுக்கும் அந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளதாக தெரிகிறது. இது மாலோதிக்கு தெரியவந்த நிலையில் கடந்த 27ம் தேதி கணவர் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார். அதன் பின்னர் மாலோதி வீடுதிரும்பாத காரணத்தினால் அவரது பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்கள். அதன்பேரில் நடந்த விசாரணையில் மாலோதி கொல்லப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. கணவர் தேலுவினை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.