LOADING...
டிரம்ப் நிர்வாகத்திற்கு வெற்றி; அமெரிக்கர்களின் சமூக பாதுகாப்பு தரவுகளை DOGE பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி
அமெரிக்கர்களின் சமூக பாதுகாப்பு தரவுகளை DOGE பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

டிரம்ப் நிர்வாகத்திற்கு வெற்றி; அமெரிக்கர்களின் சமூக பாதுகாப்பு தரவுகளை DOGE பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 07, 2025
08:36 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் அரசாங்கத் திறன் துறையை (DOGE) வலுப்படுத்தி, மிகவும் உணர்திறன் வாய்ந்த சமூகப் பாதுகாப்புத் தரவுகளுக்கான அணுகல் உட்பட விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் கேதன்ஜி பிரவுன் ஜாக்சன், சோனியா சோட்டோமேயர் மற்றும் எலெனா ககன் ஆகியோர் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும், பெரும்பான்மை முடிவின் அடிப்படையில், அரசுக்கு சாதகமாக தீர்வு வந்துள்ளது. முனதாக, கூட்டாட்சி தனியுரிமைச் சட்டங்களின் கீழ் சமூகப் பாதுகாப்பு நிர்வாக (SSA) தரவுத்தளத்தை DOGE அணுகுவதை கீழ் நீதிமன்றம் கட்டுப்படுத்திய நிலையில், அந்த தீர்ப்பையும் ரத்து செய்துள்ளது.

உத்தரவு

உத்தரவில் கூறப்பட்ட முக்கிய அம்சம்

அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையைக் கண்டறிந்து குறைப்பதற்கான அதன் நோக்கத்தைத் தொடர, வருமானம், மருத்துவ வரலாறு மற்றும் பள்ளி பதிவுகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவை அணுக சமூக பாதுகாப்பு நிர்வாகம், DOGE குழு உறுப்பினர்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மோசடி மற்றும் அரசு பணம் மற்றும் செயல்திறன் வீணாக்குதலை கண்டறிந்து சரிசெய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக DOGE இன் பங்கை டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. ஆனால் அந்த நிறுவனம் போதுமான மேற்பார்வை இல்லாமல் செயல்படுகிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு குடிமக்கள் தரவு அணுகல் மற்றும் அரசாங்க பொறுப்புக்கூறல் மீதான நிர்வாக அதிகாரத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது.