உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்கிறதா? தெரிந்து கொள்வது எப்படி!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அரசு சேவைகளைப் பெற நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அடையாள அட்டையை வழங்கியது இந்திய அரசு.
இந்தியாவின் எந்த மூலையிலும், தங்களுடை அடையாளத்திற்காக இந்த அட்டையை மக்கள் பயன்படுத்த முடியும்.
முக்கியமான இந்த அடையாள அட்டை செயலிழந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
மூன்று வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருப்பது, ஆதார் அட்டையில் இருக்கும் தகவல்கள் ஒத்துப்போகாமல் இருப்பது, குழந்தைகளின் ஆதார் அட்டையை புதுப்பிக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஆதார் எண் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே, அவ்வப்போது நம்முடைய ஆதார் எண் செயல்பாட்டில் இருக்கிறதா இல்லையா என சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
இதனை செய்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.
ஆதார்
ஆதார் செயல்பாட்டில் இருக்கிறதா என சரிபார்க்கும் வழிமுறைகள்:
கூகுள் ப்ளேஸ்டோரில் mAadhaar செயலியை பதிவிறக்கம் செய்து. அந்தச் செயலியின் மூலம் நமது ஆதார் அட்டையில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்.
இதன் மூலம் நம்முடைய ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்கிறதா அல்லது என்ன காரணத்தினால் செயல்பாட்டில் இல்லை உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
நம்முடைய 12 இலக்க ஆதார் எண்ணை (ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்), ஆதாரின் அதிகாரப்பூர்வ சேவைத் தளமான UIDAI இணையதளத்தில் பதிவிட்டும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
ஆதார் குறித்த சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற AI வசதியுடன் கூடிய ஆதார் மித்ரா என்ற சாட்பாட்டையும் இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.