
மே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
வங்கக் கடலில் உருவாகும் மோக்கா புயல், வரும் வெள்ளிக்கிழமைக்குள் மிகக் கடுமையான புயலாகத் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த புயல் காற்றின் வேகம் மணிக்கு 130 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று(மே 8) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
அது மே 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மே 10-ம் தேதி மோச்சா புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்த புயல் மே 12-ம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
details
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மழை அதிகரிக்கும்
சிறிய கடல் படகுகள் மற்றும் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மே 8 முதல் 12ஆம் தேதி வரை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு அதிகாரிகளை வானிலை துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலை ஒட்டியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகக் கடற்கரையிலிருந்து தென்மேற்கு வங்கக் கடல் வரை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இயங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் குறைந்தபட்சம் மே 11 வரை நீடிக்கும்.
இதனையடுத்து, மே-12ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.