வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று(மே-8) காலை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 10ஆம் தேதி அன்று, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இது புயலாக வலுப்பெற கூடும். இதனையடுத்து, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மே-8
சூறை காற்று வீசக்கூடிய பகுதிகள்-குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரம், இலங்கையை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான்-நிக்கோபார் தீவுகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல்.
மே-9
சூறை காற்று வீசக்கூடிய பகுதிகள்-தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல்.
details
தமிழக்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
மே-10 மற்றும் மே-11
சூறை காற்று வீசக்கூடிய பகுதிகள்-தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகள்.
மே-12
சூறை காற்று வீசக்கூடிய பகுதிகள்-மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல்.
எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மே-8 மற்றும் மே-9
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மே-10 முதல் மே-12 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.