
துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை பதக்கப்பட்டியல் : மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்த இந்தியா!
செய்தி முன்னோட்டம்
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் சார்பில் எகிப்தில் நடந்த ஐஎஸ்எஸ்எப் ஷாட்கன் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா ஒரு தங்கத்துடன் பட்டியலில் மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்துள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஏப்ரல்25 முதல் நடந்தது.
இதில் இந்தியர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற நிலையில், ஸ்கீட் பிரிவு கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் மிராஜ் அகமது கான் மற்றும் கனேமத் செகோன் தங்கம் வென்றனர்.
இதன் மூலம் ஒரு தங்கத்துடன் செக் குடியரசு மற்றும் போர்ச்சுகல் நாடுகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் இத்தாலி முதலிடத்தையும், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலத்துடன் சீனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
India finished joint 3rd at the recently concluded @issf_official World Cup Shotgun in Cairo, Egypt. #ISSFWorldCup #Shotgun #IndiaShooting #TeamIndia #Shooting #ShootingSport #India pic.twitter.com/drzM6ADPJZ
— NRAI (@OfficialNRAI) May 5, 2023