
போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உயரமான மலைகளின் மடியில் அமைந்துள்ள செழிப்பான வயல்வெளிகள், ஆற்றின் நீரோடைகள் மற்றும் காட்டுப் பாதைகளுக்கு மத்தியில் கேரன் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது.
பல தசாப்தங்களாக, பல்வேறு தாக்குதலுக்கு உள்ளன இந்த கிராமம், சுற்றுலாப் பயணிகளின் நிழல் பட கூட வாய்ப்பில்லாத ஒரு இடமாக இருந்து வந்தது.
இருப்பினும், சமீப காலமாக இந்த நிலைமை மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
"1990களில் கிளர்ச்சி தொடங்கியபோது, அந்த பாரத்தை நாங்கள் தாங்க வேண்டியிருந்ததாக இருந்தது. அன்றாட அட்டூழியங்களில் இருந்து தப்பிக்க பல கிராமவாசிகள் ஆற்றின் மறுகரைக்கு இடம்பெயர்ந்தனர்." என்று கேரனில் வசிக்கும் 76 வயதான அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
details
பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் கிராமம்
ஆனால் இன்று, இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் நீலம் ஆற்றின் கரைகளில் சுற்றுலாப் பயணிகள் உலா வருவதைக் காணலாம்.
அன்றாட வாழ்க்கை சுமுகமாக இருந்தாலும், அப்பகுதி கடுமையான கண்காணிப்பில் உள்ளது.
2021இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், எல்லையில் வசிப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்ததது.
"ஒரு அமைதியான விடியலை நான் பார்ப்பேன் என்று நான் நினைத்து கூட பார்தததில்லை. ஆனால் இப்போது அது சாத்தியமாகும் என்று நம்புகிறேன்." என்கிறார் நீலம் ஆற்றின் கரையில் ஒரு சிறிய உணவகத்தை வைத்திருக்கும் 43 வயதான தொழிலதிபர் ராய்யீஸ்.
கேரன் கிராமம் மீண்டு வருவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். ஆனால், சுற்றுலாத் துறையின் உதவியுடன், அந்த கிராமத்தால் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற முடியும்.