உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் தீபக் போரியா, நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி!
செவ்வாயன்று (மே 9) தாஷ்கண்டில் நடந்த குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் 2023 இல், இந்தியாவின் தீபக் போரியா, ஆடவர் 51 கிலோ பிரிவில், சீனாவின் ஜாங் ஜியாமாவோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதே போல் மற்றொரு இந்திய குத்துச்சண்டை வீரரான நிஷாந்த் தேவ் ஆடவருக்கான 71 கிலோ பிரிவில் பாலஸ்தீனத்தின் நிடல் ஃபோகாஹாவை இரண்டு முறை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அவர் அரையிறுதியில் கியூபாவின் ஜார்ஜ் குல்லரை எதிர்கொள்கிறார். இதற்கிடையே, சச்சின் சிவாச் 54 கிலோ எடைப் பிரிவிலும், ஆகாஷ் சங்வான் 67 கிலோ எடைப் பிரிவிலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செவ்வாய்க்கிழமை விளையாட உள்ளார்கள்.