LOADING...
300 கி.மீ வேகத்தில் பைக் பயணம் செய்த யூடியூபர் மரணம் - பதபத வைக்கும் வைரல் வீடியோ! 
300 கி.மீ வேகத்தில் பைக்கில் பறந்த யூடியூபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

300 கி.மீ வேகத்தில் பைக் பயணம் செய்த யூடியூபர் மரணம் - பதபத வைக்கும் வைரல் வீடியோ! 

எழுதியவர் Siranjeevi
May 05, 2023
02:49 pm

செய்தி முன்னோட்டம்

யூடியூபர் ஒருவர் 300 கிலோ மீட்டர் வேகத்தில் டெல்லி வழியே யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். டேராடூனை சேர்ந்த பிரபல யூடியூபர் அகஸ்தியா செளகான்(25) என்பவர் 12 லட்சம் சப்ஸ்கிரைப்பர்களுடன் பைக் பயண வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவரின் வீடியோவிற்கு ஏரளமான பார்வையாளர்களும் உண்டு. இந்நிலையில், எக்ஸ்பிரஸ் சாலையில் 300 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டியுள்ளார். நண்பர்களுடன் ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு செல்லும் வழியில் யமுனா விரைவுச்சாலையில் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளாகியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அகஸ்தியா 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஹெல்மெட் கேமராவில் பதிவாகி வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post