ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மே 18 முதல் அடிலெய்டில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஹாக்கி போட்டிகள் கொண்ட தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா திங்கட்கிழமை (மே 8) அறிவித்தது.
இந்திய அணி ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராகவும் இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சியாக இந்த தொடரை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிக்கு, சமீபத்தில் பல்பீர் சிங் சீனியர் ஹாக்கி இந்திய வீராங்கனை (2022) விருதை பெற்ற கோல்கீப்பர் சவிதா தலைமை தாங்க உள்ளார். அணியின் துணை கேப்டனாக டீப் கிரேஸ் எக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
India Women Hockey squad for australia
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் முழு விபரம்
இந்திய அணி : சவிதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம், டீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி, உதிதா, குர்ஜித் கவுர், நிஷா, நவ்ஜோத் கவுர், மோனிகா, சலிமா டெடே, நேஹா, நவ்நீத் கவுர், சோனிகா, ஜோதி, பல்ஜீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, சங்கீதா குமாரி, ஷர்மிளா தேவி.
இந்திய அணி மே 18, 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் ஆஸ்திரேலியாவையும், மே 25 மற்றும் மே 27 இல் ஆஸ்திரேலியா 'ஏ'வையும் எதிர்கொள்கிறது. அடிலெய்டில் உள்ள மேட் ஸ்டேடியத்தில் இந்த ஐந்து போட்டிகளும் நடக்க உள்ளது.