
மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தக்ஷா என்ற பெண் சிறுத்தை மற்ற சிறுத்தைகளுடன் ஏற்பட்ட சண்டையால் இன்று(மே 9) உயிரிழந்தது.
தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று உயிரிழப்பது, கடந்த 40 நாட்களில் இது மூன்றாவது முறையாகும்.
நாட்டு சிறுத்தை இனங்களை இந்தியாவில் பெருக்குவதற்காக, இருபது சிறுத்தைகள் வெளிநாடுகளில் இருந்து குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.
அந்த இருபது சிறுத்தைகளில் இரண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உயிரிழந்தன.
மார்ச் மாதம் உயிரிழந்த சாஷா எனும் சிறுத்தை, இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்தே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
details
ஜூன் மாதத்திற்கு முன் நான்கு சிறுத்தைகள் விடுதலை செய்யப்படும்: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்
ஏப்ரல் மாதம், இரண்டாவது சிறுத்தையான உதய், தேசிய பூங்காவில் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது உயிரிழந்தது.
ஜூன் மாதம் பருவமழை தொடங்குவதற்கு முன், ஐந்து சிறுத்தைகள்(மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் சிறுத்தைகள்) குனோ தேசிய பூங்காவில்(KNP) உள்ள பழக்கவழக்க முகாம்களில் இருந்து சுதந்திரமான சூழ்நிலையில் விடுவிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று தெரிவித்திருந்தது.
இதுவரை, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளில் நான்கு, வேலியிடப்பட்ட பழக்கவழக்க முகாம்களில் இருந்து சுதந்திரமான சூழ்நிலைக்குள் விடுவிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு செப்டம்பரில் நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவிற்குள் விடுவித்து, சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.