Page Loader
மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி

மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி

எழுதியவர் Sekar Chinnappan
May 05, 2023
02:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் மாட்ரிட் ஓபன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இருவரும் அரையிறுதியில் சாண்டியாகோ கோன்சாலஸ் மற்றும் எட்வார்ட் ரோஜர்-வாசெலின் ஜோடியை 5-7 7-6(3) 10-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தனர். இதன் மூலம் இந்த சீசனில் போபண்ணா-எப்டன் ஜோடி இரண்டாவது ஏடிபி மாஸ்டர்ஸ் 1,000 இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இதையடுத்து இருவரும் சனிக்கிழமை (மே 6) நடைபெறும் இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் ஜோடியை எதிர்கொள்கிறார்கள். முன்னதாக போபண்ணா எப்டனுடன் சேர்ந்து பிஎன்பி பரிபாஸ் ஓபனை கடந்த மார்ச் மாதம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post