Page Loader
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி 
காயமடைந்த வீரர்கள் உதம்பூர் கட்டளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி 

எழுதியவர் Sindhuja SM
May 05, 2023
03:16 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். சமீபத்தில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமான பயங்கரவாதிகளை விரட்டும் நடவடிக்கையை ராணுவம் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். "இதற்கு பதிலடி கொடுப்பதற்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை பயன்படுத்தினர். இதனால், இராணுவ வீரர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் காயமடைந்தனர்" என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

DETAILS

பூஞ்ச் ​​மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் 

காயமடைந்த வீரர்கள் உதம்பூர் கட்டளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ரஜோரி மாவட்டத்தின் கண்டி பகுதியில் உள்ள கேஸ்ரி மலையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஏப்ரல் 20 அன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஒரு குகைக்குள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து ராணுவ வீரர்கள் கேஸ்ரி மலை பகுதிக்கு சென்றனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது ஏப்ரல் 20 அன்று பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள பாடா துரியன் என்ற இடத்தில் ஒரு ராணுவ டிரக் மீது பயங்கரவாதிகளின் குழு பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 வீரர்கள் பலியாகினர். மேலும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் தப்பியோடினர்.