NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள்
    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள்
    உலகம்

    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    May 05, 2023 | 05:37 pm 1 நிமிட வாசிப்பு
    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள்
    இந்த சம்பவம் சரியாக எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலின் சுவர்கள் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் இன்று(மே 5) சிதைக்கப்பட்டது. இந்த மாத கடைசியில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் நிலையில், சிட்னியின் ரோஸ்ஹில்லில் உள்ள BAPS ஸ்ரீ ஸ்வாமிநாராயணன் கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இந்த சம்பவம் சரியாக எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. கோவில் அதிகாரிகள் வாசலில் காலிஸ்தான் கொடி தொங்குவதைக் கண்டு, நியூ சவுத் வேல்ஸ்(NSW) போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். "சிட்னியின் ரோஸ்ஹில்லில் உள்ள BAPS ஸ்ரீ ஸ்வாமிநாராயணன் கோவில் சுவர்களை சமூக விரோதிகள் இந்திய எதிரப்பு கிராஃபிட்டிகளால் சிதைத்ததற்கு நாங்கள் மிகவும் வருத்துகிறோம்" என்று அந்த கோவில் தேவஸ்தானம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

    "ஆஸ்திரேலியாவில் உள்ள BAPS கோவில்கள் குறிவைக்கப்படுவது எங்களுக்கு மேலும் வருத்தமளிக்கிறது. கடந்த 23 ஆண்டுகளாக, BAPS சுவாமிநாராயண் மந்திர் உள்ளூர் சமூகத்தின் ஆணிவேராக இருந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்து BAPS கோயில்களைப் போலவே, அமைதி, நல்லிணக்கம், சமத்துவம், தன்னலமற்ற சேவை மற்றும் உலகளாவிய இந்து மத விழுமியங்களின் உறைவிடமாக விளங்கும் ஒரு முக்கிய இந்து ஆலயம் இதுவாகும்." என்று மேலும் அந்த கோவில் தேவஸ்தானம் கூறியுள்ளது. பரமட்டா நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ சார்ல்டன், இந்த சம்பவம் குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்ட உடனேயே BAPS கோயிலுக்குச் சென்றதாக ஆஸ்திரேலியா டுடே செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சார்ல்டன், கோயில் அதிகாரிகளுடன் சேர்ந்து சிதைக்கப்பட்ட சுவர்களுக்கு மீண்டும் பெயிண்ட் அடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    நரேந்திர மோடி
    மோடி
    ஆஸ்திரேலியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    இந்தியா

    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  காவல்துறை
    'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு  பிரதமர்
    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி  ஜம்மு காஷ்மீர்
    மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி ரோஹன் போபண்ணா

    நரேந்திர மோடி

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர் பாகிஸ்தான்
    'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி  மோடி
    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே  காங்கிரஸ்
    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா

    மோடி

    கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை!  வந்தே பாரத்
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக
    இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு  இந்தியா

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா இந்தியா
    முதல் பழங்குடியின கிரிக்கெட் வீராங்கனை ஃபெய்த் தாமஸ் காலமானார் கிரிக்கெட்
    டிக்டாக் செயலிக்கு தடைவிதித்த ஆஸ்திரேலியா அரசு - இப்படி ஒரு காரணமா? தொழில்நுட்பம்
    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு தமிழ்நாடு

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள் இங்கிலாந்து
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் இந்தியா
    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  இந்தியா
    'தி பாய்ஸ்': வைரல் ஆடியோ மூலம் அம்ரித்பாலுக்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் போலீஸ்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023