
சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் மற்றும் அதன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடிதம் எழுதியுள்ளது.
"கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும் அல்லது ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது" என்று சோனியா காந்தி கூறியதாக மே 6 அன்று காங்கிரஸ் ட்வீட் செய்திருந்தது.
இது குறித்து நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் இருந்து கர்நாடகத்தைப் பிரிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், கர்நாடகாவின் "இறையாண்மை" குறித்து பேசியதற்காக சோனியா காந்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது.
details
இந்திய நாட்டை சீர்குலைக்கும் செயல்: பாஜக
"தேசியவாதிகள், அமைதியை விரும்புபவர்கள் மற்றும் முற்போக்காளர்களான கர்நாடக மக்களைத் தூண்டிவிடுவதற்காகவே அத்தகைய ட்வீட் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் நிலவும் நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைப்பதே அதன் நோக்கம். சில தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் குழுக்களின் வாக்குகளை/ஆதரவைப் பெறும் நோக்கத்தோடு அது செய்யப்பட்டியிருக்கிறது. மேலும், அது இந்திய நாட்டை சீர்குலைக்கும் செயல்," என்று பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், காங்கிரஸ் கட்சி இந்திய அரசுக்கு விரோதமான சக்திகளின் பக்கம் நிற்கிறது என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், ஜிதேந்திர சிங், பாஜக பொதுச் செயலாளர் தருண் சுக் ஆகியோர் தலைமையிலான பாஜக பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணையத்திற்கு சென்று இந்தக் கடிதத்தை சமர்ப்பித்தனர்.