தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதுமே தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் கைகளில் உள்ள கைபேசி மூலமே கூகுள் பே, போன் பே போன்ற வசதிகள் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்து வருகிறது.
குக்கிராமங்களில் கூட தற்போது QR கோடு மூலம் பணம் செலுத்துகிறார்கள்.
எனினும் தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது வரை ரேஷன் கடைகளில் சில்லறைகளை கொடுத்தே சர்க்கரை, கோதுமை, போன்ற பொருட்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கிறார்கள்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் புது வசதி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அதன்படி, டெம்பிள் சிட்டியிலுள்ள காஞ்சிபுர மாநகராட்சிக்குட்பட்ட MVMP ரேஷன் கடையில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறையினை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்தார்.
ரேஷன் கடைகள்
தமிழகத்தில் உள்ள 22,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்தல்
இத்திட்டத்தினை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 22,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடத்தும் பணியானது நடக்கவுள்ளது.
இதன் முதற்கட்டமாக 6,500 கூட்டுறவு சங்கங்களில் ஏப்ரல் 30ம் தேதியுடன் பதவிக்காலம் முடிந்த பணியாளர்களின் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.
இன்று(மே.,5) அரங்கேறிய இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெய ஸ்ரீ, கூடுதல் பதிவாளர் முருகன் உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.