NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி 
    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி 
    இந்தியா

    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2023 | 10:01 am 0 நிமிட வாசிப்பு
    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி 
    படகில் இருந்த பயணிகளின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

    கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று(மே 7) மாலை கடற்கரை அருகே இரட்டை அடுக்கு படகு கவிழ்ந்து மூழ்கியதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தனுர் பகுதியில் உள்ள துவல்த்திரம் கடற்கரை அருகே இரவு 7 மணியளவில் நடந்தது. படகின் உரிமையாளர் மீது குற்றமற்ற கொலைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். படகில் இருந்த பயணிகளின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. பயணிகளில் 40 பேரிடம் மட்டுமே டிக்கெட்டுகள் இருந்ததிருக்கிறது. பலரிடம் டிக்கெட்டுகள் இல்லை. படகுக்கு பாதுகாப்புச் சான்றிதழும் இல்லை என்று கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும், இந்திய கடலோர காவல்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல இருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்

    இன்னும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க நீருக்கடியில் கேமராக்கள் பயன்படுத்தி தேடுதல் பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார் . கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல உள்ளார். தனுரை சேர்ந்த அப்பகுதி மக்களுடன் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    கேரளா
    பினராயி விஜயன்
    நரேந்திர மோடி

    இந்தியா

    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை பாகிஸ்தான்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  உலக செய்திகள்
    மே 06-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை  தமிழ்நாடு

    கேரளா

    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு இந்தியா
    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை  கோவை
    கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை!  வந்தே பாரத்
    'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிரான மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  இந்தியா

    பினராயி விஜயன்

    'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்  கேரளா
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  கேரளா
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து இந்தியா
    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் கேரளா

    நரேந்திர மோடி

    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள் இந்தியா
    'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு  இந்தியா
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர் பாகிஸ்தான்
    'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி  மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023