இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெளியாகும் இறுதி கருத்துக் கணிப்புகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறிய பிறகு வாக்காளர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் இறுதி கருத்துக் கணிப்புகள் அமைகின்றன. எனவே அவை சரியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் லோக்சபா தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டும் ஒரு தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. இதுவரை கணிக்கப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளது. ABP நியூஸ்-C கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ்-110-122 இடங்களைக் கைப்பற்றும், பாஜக-73-85 இடங்களைக் கைப்பற்றும், ஜனதா தளம்-21-29 இடங்களைக் கைப்பற்றலாம்.
இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் முடிவுகள்:
இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு: காங்கிரஸுக்கு 105 இடங்களும், பாஜகவுக்கு 85 இடங்களும் கிடைக்கும். ஜனதா தளம் 32 இடங்களில் வெற்றி பெறலாம். இந்தியா டுடே-சி.வோட்டர்: பாஜக 74-86 இடங்களைக் கைப்பற்றும், காங்கிரஸ் 107-119 இடங்களைக் கைப்பற்றும். ஈடினா கருத்துக்கணிப்பு: காங்கிரஸ்- 132-140 இடங்களைக் கைப்பற்றும். பாஜக 57-65 இடங்களைக் கைப்பற்றும் ஜீ நியூஸ்-மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு: பாஜக 103 முதல் 115 இடங்களையும், காங்கிரஸ் 79 முதல் 91 இடங்களையும் கைப்பற்றும். ஜனதா தளம் 26-36 இடங்களை கைப்பற்றலாம். NDTV கணக்கெடுப்பு: பாஜகவை விட காங்கிரஸ் முன்னணியில் இருக்கும். முதல்வர் பதவிக்கு சித்தராமையா தேர்ந்தெடுக்கப்படலாம்.