NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி 
    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2023
    12:03 pm
    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி 
    இந்த விபத்தினால் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்

    ராஜஸ்தானில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானப்படையின் MIG-21 போர் விமானம் மோதியதால் 3 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பிலிபங்கா அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது. சூரத்கர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விமானி பாராசூட்டைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் விமானத்தில் இருந்து குதித்தார். எனவே, அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தை ஓட்டிய விமானி சிறிய காயங்களுடன் தப்பியதாகவும், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

    2/2

    விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது

    விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். "IAF இன் MiG-21 விமானம் இன்று காலை வழக்கமான பயிற்சியின் போது சூரத்கர் அருகே விபத்துக்குள்ளானது. விமானி சிறிய காயங்களுடன் பத்திரமாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது" என்று இந்திய விமானப்படை ட்வீட் செய்துள்ளது. "மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க விமானி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அதனால் தான், அவர் கிராமத்தின் புறநகரில் விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார்," என்று பிகானேர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஓம் பிரகாஷ் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ராஜஸ்தான்
    விமானப்படை
    விமானம்

    இந்தியா

    "இந்தியா முன்னோடியாகத் திகழ வேண்டும்".. ICANN சிஇஓ சாலி காஸ்டெர்டன்! இந்தியா
    கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் மேலும் உயரும்: நிபுணர்கள் பாகிஸ்தான்
    கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி  கேரளா
    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை பாகிஸ்தான்

    ராஜஸ்தான்

    காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு! நேபாளம்
    தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது இந்தியா
    இந்திய மலையேற்ற வீரர் மாயம்! தேடுதலில் இறங்கிய மீட்புப் படை  இந்தியா
    உயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம் இந்தியா

    விமானப்படை

    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்

    விமானம்

    மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது இந்தியா
    வேலூரில் வானில் தோன்றிய வெண்புகை வட்டம் - வியப்புடன் பார்வையிட்ட மக்கள்  தமிழ்நாடு
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு  இந்தியா
    3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன?  விமான சேவைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023