NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 1,331 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 1,331 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,72,800) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 1,331 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    May 09, 2023
    12:26 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(மே-8) 1,839ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,331 ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 22,742 ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.06 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,72,800) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,707 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 11 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களில் பதிவாகியுள்ளன.

    details

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    இந்தியாவில் மே 7ஆம் தேதி 2,380 பாதிப்புகளும், மே 5ஆம் தேதி 3,611 பாதிப்புகளும், மே 4ஆம் தேதி 3,962 பாதிப்புகளும், மே 3ஆம் தேதி 3,720 பாதிப்புகளும், மே 2ஆம் 3,325 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,18,351ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 3,752 பேர் குணமடைந்துள்ளனர்.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.76 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 1,44,767 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,82,515 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,780 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது பாகிஸ்தான்
    ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!  ஏர் இந்தியா
    கபாப் உணவு பிடிக்கவில்லை என சமையல்காரரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்!  உத்தரப்பிரதேசம்
    இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர்  சீனா

    கொரோனா

    7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை இந்தியா
    இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 14 உயிரிழப்புகள் இந்தியா
    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் இந்தியா
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் சுகாதாரத் துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025