பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம்
வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.
ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை
எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (மே 9) இரவு ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்குகளுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை முக்கியமான எல்லைப் பகுதிகளில் பல பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டன.
ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம்
வெள்ளிக்கிழமை (மே 9) இரவு ஜம்மு, சம்பா மற்றும் பதான்கோட் செக்டர்களில் பல பாகிஸ்தானிய ட்ரோன்கள் காணப்பட்டதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் ராணுவ பதற்றம் அதிகரித்தது.
ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள்
சுகாதார நிபுணர்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, ஜங்க் ஃபுட்டை தொடர்ந்து உட்கொள்வது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்த அளவை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்?
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவசரகாலங்களில் வழக்கமான இந்திய இராணுவத்தை ஆதரிக்கும் ஒரு ரிசர்வ் படையான பிராந்திய இராணுவத்தை (TA) அழைக்க இராணுவத் தளபதிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்?
கடந்த கால முன்னுதாரணத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் விலகி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அதிகரித்து வரும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்?
இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் தங்கள் கூரைகளில் பெரிய சிவப்பு சிலுவைகளை வரையத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு
தமிழ்நாட்டில் விரைவில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
டெஸ்லாவின் இந்தியா பிரிவு தலைவர் பிரசாந்த் மேனன் திடீர் ராஜினாமா; காரணம் என்ன?
டெஸ்லா நிறுவனத்தின் இந்தியா பிரிவு தலைவர் பிரசாந்த் மேனன், நிறுவனம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழையத் தயாராகி வரும் நிலையில், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் விமானப்படை அதிகாரி வாமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி செய்தியாளர்களை சந்தித்தனர்.
நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல்
நேற்றிரவு 8.00 மணி முதல் 11.30 மணி வரை, இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஒரே நேரத்தில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்!
ஒரு பழங்கால சோவியத் விண்கலமான கோஸ்மோஸ் 482, இந்த வார இறுதியில் பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடற்ற முறையில் மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை
சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரில் உள்ள உப்புகள் மற்றும் தாதுக்கள் அதிகமாகச் செறிந்து, கடினமான படிகங்களாக உருவாகும் அமைப்புகள்.
நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ்
தூக்கம் ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இருப்பினும், பெரும்பாலானவர்களுக்கு தரமான ஓய்வைப் பெறுவது குதிரை கொம்பாக இருக்கிறது.
சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளார்.
அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சகம் (MHA) கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது?
மே 8-9 இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானின் மேற்கு எல்லை முழுவதும் நடத்தப்பட்ட ஒரு பெரிய ட்ரோன் தாக்குதலை இந்தியப் படைகள் திறம்பட முறியடித்தன.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ள இந்திய ஆயுதப்படைகளுக்கு மாநில அளவிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, கர்நாடக அரசு மசூதிகளில் சிறப்பு வெள்ளிக்கிழமை (மே 9) தொழுகைகளையும் பெங்களூருவில் ஒரு அடையாள கொடி அணிவகுப்பையும் அறிவித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு; காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (மே 9) சரிவைச் சந்தித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்த பதட்டங்களால் வீழ்ச்சி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025: ஒரு வாரம் போட்டிகள் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் 2025 தொடரில் அடுத்த ஒரு வாரம் நடக்க உள்ள போட்டிகள் மட்டும் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் வெள்ளிக்கிழமை (மே 9) அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்க, ஜூன் 5, 2025 முதல் கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது.
2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளில் உள்ள டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவ காலாட்படையின் 32 பட்டாலியன்களில் 14 ஐ 2028 வரை நிலைநிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
தேவையான கையிருப்பு உள்ளது; எரிபொருள், எல்பிஜி வாங்க அவசரப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எல்பிஜி விநியோகம் சீராக இருக்கும் என்று இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) வெள்ளிக்கிழமை (மே 9) உறுதிமொழியை வெளியிட்டது.
கமல்ஹாசன்- மணிரத்னத்தின் 'தக் லைஃப்' ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைப்பு
கமல்ஹாசன்- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்தது.
ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை
இந்திய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் துருப்புக்களின் நடமாட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்வதிலோ அல்லது லைவ் அறிக்கைகளை வெளியிடுவதிலோ ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அனைத்து ஊடக நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 9) ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது.
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் சமீபத்திய ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது.
எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.
போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு
இந்தியா vs பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றங்கள் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் காலவரையறையின்றி நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன?
வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானின் தூண்டுதலற்ற தாக்குதல் கடுமையான பதிலடியை சந்தித்தது.
பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா தொடங்கிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்து வரும் ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (மே 9) சரிவுடன் தொடங்கின.
இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம், ICAI CA மே 2025 தேர்வின் மீதமுள்ள தாள்களை ஒத்திவைத்துள்ளது.
இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்
இந்தியாவுடனான ராணுவ பதட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நிதி தேவைக்காக சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளிடம் அவசர உதவி கோரி கையேந்தி உள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்திற்குள் வெடித்தது கலகம்? தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்
பாகிஸ்தான் ராணுவ தலைமையில் கலகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்
ஜம்மு- காஷ்மீரின் மேற்கு எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய பல ஒருங்கிணைந்த ட்ரோன் மற்றும் missile தாக்குதல்களை இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை காலை வெற்றிகரமாக முறியடித்ததாக தெரிவித்துள்ளது.
விமான தாக்குதல் சைரன்கள் ஒலிப்பு; ட்ரோன்கள் அச்சுறுத்தலால் உச்ச கட்ட எச்சரிக்கையில் சண்டிகர்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நகரம் முழுவதும் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததால், சண்டிகர் யூனியன் பிரதேசம் வெள்ளிக்கிழமை (மே 9) காலை உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா!
ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயது அழகு ராணி நந்தினி குப்தா, 72வது உலக அழகி போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!
நாட்டில் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, விமான பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்
தரம்சாலாவில் வியாழக்கிழமை (மே 8) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 சீசன் தொடர்ந்து நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை
போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முறையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்!
உலகப் பொருளாதாரத்தை அமெரிக்காவிற்கு சாதகமாக மறுவடிவமைக்க, புதிய இறக்குமதி வரிகளை விதித்து உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைத்த டிரம்ப், நேற்று மிகப்பெரிய பொருளாதார நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆவதை குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜம்மு, ஜெய்சால்மர் மற்றும் பதான்கோட் உள்ளிட்ட இந்திய நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த பின்னர், வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் சியால்கோட் ஆகிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல்
பாகிஸ்தானுடனான போர் பதற்றத்திற்கு மத்தியில், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தில் இந்தியா ஒரு பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
ஐபிஎல்: தர்மசாலாவிலிருந்து வீரர்களை சிறப்பு ரயில் மூலம் அழைத்து வர பிசிசிஐ முடிவு
எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான IPL 2025 போட்டியை ரத்து செய்ய BCCI முடிவு செய்துள்ளது.
ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம்
ஜம்முவின் அக்னூரில், தனது போர் விமானத்தில் இருந்து குதித்த பாகிஸ்தான் விமானப்படை விமானி இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
வாடிகனின் புதிய போப் ஆண்டவர் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்; யார் அவர்?
வியாழக்கிழமை கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல்
ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் வியாழக்கிழமை முறியடித்தன.
பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி பாதிலேயே ரத்து
ஒரு பெரிய முன்னேற்றத்தில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 இன் 58வது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே வெள்ளை புகை வெளியேறியது; புதிய போப் தேர்வானார்
ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஜம்முவை நோக்கி வந்த பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா
இந்தியாவில் உள்ள பல நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் F-16 போர் விமானம் இந்தியாவின் வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு
வியாழக்கிழமை இரவு, ஜம்முவில் உள்ள விமான ஓடுபாதை உட்பட பல இடங்கள் சர்வதேச எல்லையில் இருந்து ராக்கெட்டுகளால் தாக்கப்பட்டன.
ஐபிஎல் 2025: பிபிகேஎஸ்vsடிசி போட்டி மழையால் தாமதமாக தொடக்கம்; டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக்கிழமை (மே 8) நடைபெறும் 58வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.
உச்சகட்ட பீதி; இந்தியாவின் பதிலடியைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களையும் மூடிய பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கொடுத்த பதிலடியைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்ச கட்டத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி அகமதாபாத்திற்கு இடமாற்றம் செய்வதாக அறிவிப்பு
ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டி, தர்மசாலாவில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக ஏற்பட்ட பாதுகாப்பு கவலைகள் காரணமாக போட்டி அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரால் நாடாளுமன்றத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் எம்பி; வைரலாகும் வீடியோ
இந்தியாவுடனான அதிகரித்து வரும் ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில், தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை எடுத்துரைக்கும் போது, பாகிஸ்தான் மூத்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ராணுவ மேஜருமான தாஹிர் இக்பால் தேசிய சட்டமன்றத்தில் விரக்தியடைந்து புலம்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென போன் போட்ட பிரேசில் அதிபர்; ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டு
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு வலுவான ஆதரவை வழங்கியுள்ளார்.
காணக் கிடைக்காத அரிய நிகழ்வு; கடைக்குள் சிவலிங்கத்துடன் காட்சி தந்த மலைப்பாம்பு
இந்துக்களுக்கு புனித நகரங்களில் ஒன்றாக இருக்கும் ஹரித்வாரில் மிகவும் மதிக்கப்படும் இடங்களில் ஒன்றான ஹர் கி பௌரியில் ஒரு ஆச்சரியமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நிகழ்ந்தது.
இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் வயர்லெஸ் சார்ஜிங்; புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது இந்தியா
இந்தியாவின் மின்சார வாகன ஈக்கோசிஸ்டத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் VNIT நாக்பூர் இணைந்து உருவாக்கிய உள்நாட்டு வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி
இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கடுமையாக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 8) மீண்டும் உறுதிப்படுத்தியது.
PSL போட்டிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல்
புதன்கிழமை பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் ட்ரோன் தாக்குதலால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் முதல்முறையாக இரண்டாம் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேச நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவையும், மோதலில் அமெரிக்காவின் முக்கிய பங்கை முறையாக அங்கீகரிப்பதையும் குறிக்கும் வகையில் மே 8 ஆம் தேதியை இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினமாக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார்.
பாகிஸ்தான் படங்கள், வெப் சீரீஸ்களை ஒளிபரப்புவதை நிறுத்த ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் அனைத்து கன்டென்ட்களையும் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, அனைத்து ஓடிடி தளங்கள், ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு மத்திய அரசு ஒரு முறையான ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
கூகிள் மேப்ஸ் இப்போது உங்கள் ஐபோன் ஸ்கிரீன் ஷாட்களை ஸ்கேன் செய்து லொகேஷன்களை கண்டறியும்
கூகிள் மேப்ஸ் ஐபோன் பயனர்களை இலக்காகக் கொண்ட ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தானுடனான வங்கதேச அணியின் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், இரு நாடுகளுடனான வங்கதேச கிரிக்கெட் அணியின் வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) புதன்கிழமை (மே 7) உறுதிப்படுத்தியது.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
ஸ்பேஸ்எக்ஸ் துணை நிறுவனமான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) ஒரு லெட்டர் ஆஃப் இன்டென்ட் (Leter of Intent)-ஐப் பெற்றுள்ளது.
எல்லா பக்கமும் அடி; 2008க்கு பிறகு மோசமான சரிவை சந்தித்த பாகிஸ்தான் பங்குச் சந்தை
இந்தியாவுடனான அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களால் தூண்டப்பட்ட கூர்மையான சரிவுக்குப் பிறகு பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) வியாழக்கிழமை (மே 8) தீவிர ஏற்ற இறக்கத்தைக் கண்டதால் வர்த்தகம் இடையில் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது.
ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள்; ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸ் என்று அழைக்கப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள், எல்லையைத் தாண்டி இந்திய ராணுவத்தின் சமீபத்திய உயர்-துல்லிய பயங்கரவாத எதிர்ப்புப் பணியான ஆபரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்; சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைப்பு; கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றம்
தமிழக அமைச்சரவையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மூத்த அமைச்சர்களின் இலாகாகக்களை மாற்றி உள்ளார். ராஜ்பவன் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.
S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.
பாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா
மே 7-8 தேதிகளில் வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் பல இராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
'ஆபரேஷன் சிந்தூர்'க்கு ட்ரேட்மார்க் கோரி விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்; என்ன காரணம்?
"ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இந்திய ராணுவ நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் "ஆபரேஷன் சிந்தூர்"-க்கான ட்ரேட்மார்க் விண்ணப்பத்தை முதன்முதலில் தாக்கல் செய்துள்ளது.
'தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் மகப்பேறு விடுப்பு உரிமை உண்டு': சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு/குழந்தை தத்தெடுப்பு/மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்கிறதா சவுதி அரேபியா? வெளியுறவு அமைச்சர் திடீர் வருகையின் பின்னணி என்ன?
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்-ஜுபைர் வியாழக்கிழமை (மே 8) புதுடெல்லிக்கு திடீரென அறிவிக்கப்படாத பயணம் செய்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார்.
லாகூர், கராச்சியில் பறந்த 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த பிறகு, இந்தியா பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நீடிக்கிறது.
'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல்
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் கீழ் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தொடரும் ஆபரேஷன் சிந்தூர்: இந்திய தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத்தகவல்
புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்த அதே வேளையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்வதாக வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு மூன்றாவது முறையாக 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகிள்
Google தனது உலகளாவிய வணிகப் பிரிவில் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தி இன்ஃபர்மேஷன் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ராயல் சல்யூட்: விசேஷ சலுகைகள் அறிவிப்பு
நாட்டிற்காக வீரதீரமாக பணியாற்றும் இந்திய ராணுவத்தினரை கவுரவிக்கும் விதமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.
சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தேசவிரோத பிரச்சாரத்தை கண்காணிப்பதை முடுக்கிவிடவும், தவறான தகவல்கள் பரவுவதற்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் (MHA) அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
மே 12 மூலம் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பெறலாம்; டிஜிலாக்கரில் பதிவிறக்குவது எப்படி?
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் மே 12 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியலைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத பதுங்கிடங்களுக்கு எதிராக இந்திய சார்பாக நடத்தப்பட்ட ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர்'.
14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம்
பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராட்டம் நடந்து வரும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
'ஆபரேஷன் சிந்தூர்'-க்குப் பிறகு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறது மத்திய அரசு
மத்திய அரசு வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அரசியல் தலைவர்களுக்கு விளக்குவதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகும்.
ஐபிஎல்லில் இருந்து விரைவில் விரைவில் விலகுகிறாரா தோனி? அவரே வெளியிட்ட அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து ஓய்வு பெறுவது விரைவில் நடக்கக்கூடும் என்பதற்கான தனது வலுவான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 91.94% தேர்ச்சியுடன் அரசு பள்ளிகள் அசத்தல்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்
வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
'மதிப்பிற்குரிய நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம்' நடைபெற உள்ளதாக டொனால்ட் டிரம்ப் சூசகம்
"பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாட்டின்" பிரதிநிதிகளுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது
வியாழக்கிழமை தொடர்ந்து 14வது நாளாக பாகிஸ்தான் துருப்புக்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலை மேற்கொண்டனர்.
மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'திருக்கல்யாணம்', இன்று (மே 8) காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெற உள்ளது.
லாகூர், இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் மீதான வான்வழியை மூடிய பாகிஸ்தான்
புதன்கிழமை நள்ளிரவு எடுத்த முடிவில், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.