
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்; சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைப்பு; கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழக அமைச்சரவையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மூத்த அமைச்சர்களின் இலாகாகக்களை மாற்றி உள்ளார். ராஜ்பவன் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.
இதன்படி அமைச்சர்கள் எஸ்.ரகுபதி மற்றும் துரைமுருகனுக்கு இடையே சட்டம் மற்றும் சுரங்கத் துறைகளை மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலாகா மாற்றத்திற்கு பிறகு முன்னர் சட்டத்துறையை வகித்த அமைச்சர் எஸ்.ரகுபதி, அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்துறை தற்போது நீர்வளத் துறையை ஏற்கனவே மேற்பார்வையிடும் அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, துரைமுருகனின் முந்தைய இலாகாவான சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறை, ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வசம்
இந்த மாற்றத்தின் மூலம், ரகுபதி இப்போது கனிம வளத்துறை அமைச்சராகப் பணியாற்றுவார். இலாகா மாற்றங்கள் இருந்தபோதிலும், அமைச்சர் துரைமுருகன் முக்கிய நீர்வளத் துறையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
முதலமைச்சரின் பரிந்துரையைத் தொடர்ந்து, இந்த மறுசீரமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டது.
சமீபத்தில் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தபோது அடுத்த அமைச்சரவை மாற்றம் அரங்கேறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.