
ஐபிஎல் 2025: பிபிகேஎஸ்vsடிசி போட்டி மழையால் தாமதமாக தொடக்கம்; டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக்கிழமை (மே 8) நடைபெறும் 58வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
முன்னதாக, மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு, 7 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் தற்போது 8.30 மணிக்கு தொடங்க உள்ளது.
எனினும், ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
வீரர்கள்
விளையாடும் லெவன் வீரர்கள்
டெல்லி கேப்பிடல்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், டி நடராஜன்.
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ்(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
இம்பாக்ட் வீரர்கள் பின்வருமாறு:-
டெல்லி கேபிட்டல்ஸ்: அசுதோஷ் ஷர்மா, ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம், திரிபூர்ணா விஜய்.
பஞ்சாப் கிங்ஸ்: விஜய்குமார் வைஷாக், ஹர்ப்ரீத் ப்ரார், பிரவீன் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
#ShreyasIyer has won the toss & #PunjabKings will bat first in this exciting #IPLRace2Playoffs clash! Here's a look at the Playing XIs 📝
— Star Sports (@StarSportsIndia) May 8, 2025
🔴 PBKS 👉 Unchanged
🔵 DC 👉 Debutant Madhav Tiwari replaces Vipraj Nigam, Sameer Rizvi replaces Karun Nair!
Watch the LIVE action ➡… pic.twitter.com/7MZvPOcLVd