
பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!
செய்தி முன்னோட்டம்
நாட்டில் பாதுகாப்பு சூழ்நிலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, விமான பயணிகள் விமானம் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்க இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
எல்லை மாநிலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விமான பயணிகள் நெருக்கடியைத் தவிர்க்க, விமான நிலையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும் என விமான நிறுவனங்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
விமான நிலையங்கள்
24 விமான நிலையங்கள் மூடல்
இந்நிலையில், ஸ்ரீநகர், சண்டிகர், ஜெய்சால்மர், ஜோத்பூர் உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் மூடல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவில் விமான நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் மூடப்பட்ட விமான நிலையங்களில் சண்டிகர், ஸ்ரீநகர், ஜெய்சல்மர், சிம்லா மற்றும் பல.
இந்தியாவில் மூடப்பட்ட 24 விமான நிலையங்களின் முழு பட்டியல்:
சண்டிகர்
ஸ்ரீநகர்
அமிர்தசரஸ்
லூதியானா
பூந்தர்
கிஷன்கர்
பாட்டியாலா
சிம்லா
காங்க்ரா-கக்கல்
பதிண்டா
ஜெய்சால்மர்
ஜோத்பூர்
பிகானேர்
ஹல்வாரா
பதன்கோட்
ஜம்மு
லே
முந்த்ரா
ஜாம்நகர்
ஹிராசா (ராஜ்கோட்)
போர்பந்தர்
கேஷோத்
காண்ட்லா
புஜ்