
பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத பதுங்கிடங்களுக்கு எதிராக இந்திய சார்பாக நடத்தப்பட்ட ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர்'.
நேற்று நள்ளிரவு நடந்த இந்த துல்லிய தாக்குதலுக்கு பிறகு, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் 21 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ADCP-2, சிரிவெண்ணெலா, இந்த விமான நிலையங்களுக்கு பயணிக்கும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், மே 10 வரை அமிர்தசரஸ் விமான நிலையம் தவிர மற்ற மாவட்டங்களின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
பள்ளி மூடல்கள்
ராஜஸ்தானின் எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
விமான நிலையங்களுடன், ராஜஸ்தானின் எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலம் பாகிஸ்தானுடன் 1,037 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
இந்த உத்தரவு பார்மர், பிகானீர், ஸ்ரீ கங்காநகர் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும்.
எல்லை முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சந்தேகத்திற்கிடமான நடத்தையை கவனித்தால், கண்டதும் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப்
பஞ்சாப் காவல்துறையின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன
பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாபில் , காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அனைத்து விடுப்புகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் அரசு ஒரு இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி மற்றும் 55 பஞ்சாப் சிவில் சர்வீசஸ் (PCS) அதிகாரிகளுக்கான இடமாற்றம் மற்றும் பணி நியமன உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தியது.
மேலும், பொதுக்கூட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் முதலமைச்சர் பகவந்த் மான் அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.
விமான இடைநீக்கங்கள்
விமானப்படை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது
இதற்கிடையில், இந்திய விமானப்படை தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளது.
போர் விமானங்கள் மேற்குப் பகுதியை கண்காணிப்பதால், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் பிகானர் விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் மே 9 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கங்காநகரில் இருந்து ரான் ஆஃப் கட்ச் வரை சுகோய்-30 எம்கேஐ விமானங்கள் வான் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
பிகானேர், ஸ்ரீ கங்காநகர், ஜெய்சால்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் நடந்து வரும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.