Page Loader
2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு
2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த உத்தரவு

2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
May 09, 2025
02:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளில் உள்ள டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவ காலாட்படையின் 32 பட்டாலியன்களில் 14 ஐ 2028 வரை நிலைநிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது. தொடர்ச்சியான எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த ராணுவ பதட்டங்களை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது. புதுடெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்களுடன் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் முறியபடிப்பு

பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிப்பு

இந்திய ராணுவத் தளங்கள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்து மே 8-9 இடைப்பட்ட இரவு பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட பல ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இந்திய ஆயுதப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. இந்த தாக்குதல்களால் ஸ்ரீநகர், ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் பரவலான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பதிலுக்கு, இந்தியப் படைகள் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பல பாகிஸ்தான் ராணுவச் சாவடிகளை அழித்தன. மேலும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) சம்பா செக்டாரில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்து, ஏழு பயங்கரவாதிகளை வீழ்த்தியது. இந்தியாவின் ஏவுகணை எதிர் தாக்குதல் குறைந்தது 70 பயங்கரவாதிகளை வீழ்த்தியதாகவும், 60 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

அறிக்கை விபரம்