Loading...
தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 17, 2026
10:44 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூலை 17), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 குறைந்து ₹13,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹1,04,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹54 குறைந்து ₹14,291 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹432 குறைந்து ₹1,14,328 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளிவிலை 

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹50 குறைந்து ₹10,920 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 குறைந்து ₹87,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹235 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,35,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT