NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்

    பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2025
    05:44 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (மே 9) மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் விமானப்படை அதிகாரி வாமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி செய்தியாளர்களை சந்தித்தனர்.

    முன்னதாக, ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்க மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா முறியடித்து வருவதோடு, பாகிஸ்தானிற்குள் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது.

    இந்நிலையில், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    VIDEO | MEA (@MEAIndia) Press Briefing: Colonel Sofiya Qureshi says, "On the intervening night of May 8 and May 9, Pakistani army tried to attack military installations on the western borders. From Leh to Sir Creek, Pakistani army used drones for infiltration."#OperationSindoor… pic.twitter.com/NOm4xmAdWk

    — Press Trust of India (@PTI_News) May 9, 2025

    துருக்கி ட்ரோன்கள் 

    தாக்குதலுக்கு துருக்கி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் 

    கர்னல் சோபியா குரேஷி இதுகுறித்து கூறுகையில், மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இந்தியாவின் 36 ராணுவ நிலைகளை குறிவைத்து 300-400 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக தெரிவித்தார்.

    எனினும், இவை அனைத்தையும் முறியடித்த இந்தியா பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தது.

    மேலும், தாக்குதலுக்கு துருக்கியின் அசிஸ்கார்டு சோங்கர் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானிற்குள் நான்கு பாதுகாப்பு தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக விங் கமாண்டர் வாமிகா சிங் கூறினார். மேலும், எல்லையில் துப்பாக்கிச் சூட்டிற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் இந்தியா மீது தாக்கியபோது அதன் சிவில் விமான சேவைகளை நிறுத்தாமல் பொதுமக்களை ஆபத்தில் தள்ளியது என்று கூறி, அதற்கான புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா
    ஆபரேஷன் சிந்தூர்

    சமீபத்திய

    சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  சென்னை
    டெஸ்லாவின் இந்தியா பிரிவு தலைவர் பிரசாந்த் மேனன் திடீர் ராஜினாமா; காரணம் என்ன? டெஸ்லா
    பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி; இந்திய வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் மத்திய அரசு
    நேற்றிரவு, இந்தியாவில் உள்ள 24 நகரங்களை குறிவைத்து 500 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் எனத்தகவல் இந்தியா

    மத்திய அரசு

    மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது; ஏன்? எலான் மஸ்க்
    2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் ஒரே நாடு ஒரே தேர்தல்
    வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்  வக்ஃப் வாரியம்
    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு பெட்ரோல்

    இந்தியா

    'ஆபரேஷன் சிந்தூர்': பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் இந்திய ராணுவம்
    Op Sindhoor: இந்திய ராணுவம் தாக்கிய 9 பயங்கரவாத இலக்குகள் எவை? எப்படி? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்கள் ரியாக்ஷன் என்ன? பாகிஸ்தான்
    இன்று இந்தியா முழுவதும் போர் பயிற்சி ஒத்திகை: மின்தடை மற்றும் சைரன்களுக்கான நேரங்கள் என்ன? போர்

    ஆபரேஷன் சிந்தூர்

    லெஃப்ட்-ல இண்டிகேட்டர், ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல் -Op Sindoor இந்திய ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் பஹல்காம்
    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025