NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்?
    பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம்

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2025
    07:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவசரகாலங்களில் வழக்கமான இந்திய இராணுவத்தை ஆதரிக்கும் ஒரு ரிசர்வ் படையான பிராந்திய இராணுவத்தை (TA) அழைக்க இராணுவத் தளபதிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

    அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில், மே 6 அன்று வெளியிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சக அறிவிப்பின்படி, தற்போதுள்ள 32 பிராந்திய இராணுவ பட்டாலியன்களில் 14 பட்டாலியன்களை முக்கிய இராணுவ மண்டலங்களில் நிறுத்துவதன் மூலம் நாடு முழுவதும் இராணுவ இருப்பை வலுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

    இவற்றில் தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு மற்றும் தென்மேற்கு கட்டளைப் பிரிவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளைப் பிரிவு மற்றும் இராணுவப் பயிற்சி கட்டளைப் பிரிவு (ARTRAC) ஆகியவை அடங்கும்.

    பிராந்திய இராணுவம் 

    பிராந்திய இராணுவம் (TA) என்றால் என்ன?

    பிராந்திய இராணுவம் (Territorial Army) என்பது வழக்கமான இந்திய இராணுவத்திற்குப் பிறகு இரண்டாவது வரிசைப் பாதுகாப்பாகச் செயல்படும் ஒரு தன்னார்வப் படையாகும்.

    முழுநேர வீரர்களைப் போலல்லாமல், TA உறுப்பினர்கள் பொதுமக்களாக வாழ்வார்கள்.

    அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் பயிற்சி அளித்து நாட்டிற்கு சேவை செய்ய, தங்கள் வழக்கமான வேலைகளில் இருந்து நேரம் ஒதுக்கி பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்தப் படை, ஏற்கனவே சிவில் தொழில்களில் பணிபுரியும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வணிக உரிமையாளர்கள் என தினசரி பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்.

    எனினும், அவர்கள் அழைக்கப்படும்போது சீருடையை அணியத் தயாராக இருப்பவர்கள்.

    அவர்கள் அவ்வப்போது இராணுவப் பயிற்சி பெறுவார்கள் மற்றும் போர்கள், இயற்கை பேரழிவுகள் அல்லது பிற அவசரநிலைகளின் போது தேசிய பாதுகாப்பை ஆதரிக்கத் தயாராக இருக்கும் வீரர்கள் ஆவர்.

    பயிற்சி

    பகுதி நேர ராணுவம்!

    பிராந்திய இராணுவம் பகுதிநேரமாக செயல்படுகிறது, மேலும் தன்னார்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாத பயிற்சி பெற வேண்டும்.

    சூழ்நிலையைப் பொறுத்து, தேவைக்கேற்ப நீட்டிக்கப்பட்ட இராணுவ சேவைக்கும் TA அதிகாரிகள் அழைக்கப்படலாம்.

    பயிற்சி அல்லது செயலில் பணிக்காக அழைக்கப்படும்போது, ​​அவர்கள் வழக்கமான இராணுவ அதிகாரிகளைப் போலவே அதே ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளைப் பெறுகிறார்கள்.

    லெப்டினன்ட் கர்னல் வரையிலான பதவி உயர்வுகள் சேவை காலம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில் கர்னல் மற்றும் பிரிகேடியர் பதவி உயர்வுகள் தேர்வின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

    நிலைமை

    தற்போது 50,000 பிராந்திய ராணுவத்தினர் பணியில் உள்ளனர்

    அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பிராந்திய இராணுவம் தற்போது 65 பிரிவுகளில் சுமார் 50,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

    இதில் துறை சார்ந்த பிரிவுகள் (ரயில்வே, ONGC மற்றும் இந்தியன் ஆயில் போன்றவை) மற்றும் துறை சாரா பிரிவுகள் (காலாட்படை பட்டாலியன்கள், சுற்றுச்சூழல் பணிக்குழுக்கள் மற்றும் பொறியியல் பிரிவுகள்) இரண்டும் அடங்கும்.

    வரலாறு

    சுதந்திரம் பெறும் முன்பே தோற்றுவிக்கப்பட்ட TA படை

    1857 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் தொடங்கி நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது பிராந்திய ராணுவம்.

    இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1948 ஆம் ஆண்டு பிராந்திய இராணுவச் சட்டம் இயற்றப்பட்டது.

    ஒரு வருடம் கழித்து, 1949 ஆம் ஆண்டு, முதல் இந்திய கவர்னர் ஜெனரலான சி. ராஜகோபாலாச்சாரியால் இந்தப் படை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

    உருவாக்கப்பட்டதிலிருந்து, TA, 1962, 1965 மற்றும் 1971 போர்கள், இலங்கையில் ஆபரேஷன் பவன், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி எதிர்ப்பு கடமைகள் உள்ளிட்ட முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

    பூகம்பங்கள் மற்றும் சூறாவளிகள் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது உதவுவதில் TA பிரிவுகளும் முக்கிய பங்கு வகித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ராணுவம்
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை
    தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு தமிழக அரசு

    இந்திய ராணுவம்

    36 மணி நேரத்திற்குள் இந்தியா பதிலடி கொடுக்கும் என்று அச்சம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர் பாகிஸ்தான்
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அடியில் பாகிஸ்தான் சுரங்கப்பாதைகள் தோண்டியதா? ராணுவம் விசாரணை பாகிஸ்தான்
    பஹல்காம் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அமெரிக்கா
    ராணுவம் மற்றும் விமானப்படைக்கான ALH துருவ் ஹெலிகாப்டரை மீண்டும் இயக்க மத்திய அரசு அனுமதி விமானப்படை

    இந்தியா

    இன்று இந்தியா முழுவதும் போர் பயிற்சி ஒத்திகை: மின்தடை மற்றும் சைரன்களுக்கான நேரங்கள் என்ன? போர்
    ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல் ஆபரேஷன் சிந்தூர்
    ‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு ஆபரேஷன் சிந்தூர்
    Op sindoor எதிரொலி: பின்வாங்கும் பாகிஸ்தான், பம்மிய அமைச்சர் கவாஜா ஆசிப் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025