LOADING...
மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம்
மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம்

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2025
08:43 am

செய்தி முன்னோட்டம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'திருக்கல்யாணம்', இன்று (மே 8) காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை நகரம் முழுவதும் பண்டிகை போல் மின்னுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபோகத்தை காணக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு போக்குவரத்து மாற்றங்களும், பார்க்கிங் வசதிகளும் மதுரை மாநகராட்சி சார்பாகவும், கோவில் நிர்வாக குழு சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. அனுமதி சீட்டுடன் வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பக்தர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

போக்குவரத்து மாற்றங்கள்

வாகன நிறுத்தும் வழிமுறைகள் அறிவிப்பு

மஞ்சள் நிற சீட்டு: மேல ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்தலாம். வருகை பாதை - வடக்கு மேலமாசி வீதி சந்திப்பு, வடுககாவல் கூடத்தெரு, தானப்ப முதலி தெரு. வெளியேறும் பாதை-பண்டு ஆபீஸ், ஜான்சிராணி பூங்கா, நேதாஜி ரோடு. ரோஸ் நிற சீட்டு: வடக்கு ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்தலாம். திருப்பத்திற்குப் பிறகு தளவாய் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக செல்ல வேண்டும். நீலநிற சீட்டு: தெற்காவணி மூல வீதி, கட்டபொம்மன் சிலை, நேதாஜி ரோடு, ஜான்சிராணி பூங்கா வழியாக வரலாம். வெளியேறும் வழிகள்-வெங்கல்கடை தெரு, விளக்குத்தூண். அனுமதி இல்லாத வாகனங்கள்:அதிகாலை 5:00 மணி முதல் கிழக்கு, தெற்கு, வடக்கு மாசிவீதிகளில் நிறுத்த அனுமதி. கீழ் ஆவணி மூலவீதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.