
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.
மாநில அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கடந்த மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகளை எழுதினர்.
இந்த தேர்வுகளில் மொத்தம் 8.21 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
முதலில் மே 9ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, ஒரு நாள் முன்னதாகவே இன்று முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | இன்று வெளியாகிறது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!#SunNews | #12thResults | #ExamResults pic.twitter.com/02u5Ghlle7
— Sun News (@sunnewstamil) May 8, 2025
எங்கே பார்க்கலாம்?
தேர்வு முடிவுகளை எங்கே பார்க்கலாம்?
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி [https://results.digilocker.gov.in](https://results.digilocker.gov.in) மற்றும் [www.tnresults.nic.in](http://www.tnresults.nic.in) இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வு எழுதிய மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.