NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்
    லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் pc: (x.com/madhuriadnal)

    Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 08, 2025
    09:41 am

    செய்தி முன்னோட்டம்

    வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இதனை அடுத்து பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தன என்றும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர் என்றும் ராய்ட்டர்ஸ் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது.

    விவரங்கள்

    3 ட்ரோன் தாக்குதல் நடந்தாக தகவல்

    லாகூர் வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

    மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வருவதையும், புகை மேகங்கள் சூழ்ந்திருப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன.

    3 வெடிச்சத்தங்கள் கேட்டதாக உளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தப் பகுதி லாகூரின் ஆடம்பரமான மத்திய வணிக மாவட்டம் மற்றும் லாகூர் இராணுவப் பாசறையை ஒட்டியுள்ளது.

    5-6 அடி நீளமுள்ள ஒரு ட்ரோன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    எனினும் இந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Three blasts reported near Lahore Walton Airport!
    Panic erupts in Pakistan.#Lahore #LahoreAirport pic.twitter.com/qblEbEXBWf

    — Madhuri Adnal (@madhuriadnal) May 8, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் பாகிஸ்தான்
    'மதிப்பிற்குரிய நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம்' நடைபெற உள்ளதாக டொனால்ட் டிரம்ப் சூசகம்  அமெரிக்கா
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இடைவிடாத ஷெல் தாக்குதல்களைத் தொடர்கிறது பாகிஸ்தான்
    மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம் மதுரை

    பாகிஸ்தான்

    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க பாதுகாப்புத் தலைவருடன் ராஜ்நாத் சிங் உரையாடல் ராஜ்நாத் சிங்
    பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், ஏர் இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்!: ஏர் இந்தியா
    எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி இந்திய ராணுவம்
    அட்டாரி-வாகா எல்லை வாயிலைத் திறந்து, இந்தியாவிலிருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கும் பாகிஸ்தான் இந்தியா

    குண்டுவெடிப்பு

    தவறான நோக்கத்துடன் தகவல் தேடுபவர்களை கண்டறிய கூகுள், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடிய சைபர் கிரைம் கேரளா
    ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா ஏர் இந்தியா
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்கெடுப்புக்கு மத்தியில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பு சத்தீஸ்கர்
    சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025