
தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் விரைவில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கி வைப்பார் எனவும், இதற்காக முதற்கட்டமாக 1,842 மினி பேருந்துகளின் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை, மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் நோக்கத்துடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான இது சார்ந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து, 2000 வழித்தடங்களில் இதனை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மினி பஸ் சேவை!#SunNews | #SmallBus | #TNBuses pic.twitter.com/Ey0o4Wn3HM
— Sun News (@sunnewstamil) May 9, 2025