
ஐபிஎல் 2025: ஒரு வாரம் போட்டிகள் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் அடுத்த ஒரு வாரம் நடக்க உள்ள போட்டிகள் மட்டும் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் வெள்ளிக்கிழமை (மே 9) அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியா vs பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றங்கள் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் காலவரையறையின்றி நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய தகவல் வெளியாகி இருந்தது.
முன்னதாக, தரம்சாலாவில் வியாழக்கிழமை பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.
மேலும், தொடரை ரத்து செய்வது குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ஐபிஎல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு வாரம் போட்டிகள் நிறுத்தப்படுவதாக கூறியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
🚨 News 🚨
— IndianPremierLeague (@IPL) May 9, 2025
The remainder of ongoing #TATAIPL 2025 suspended with immediate effect for one week.
வீரர்கள் வெளியேற்றம்
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் வீரர்கள் வெளியேற்றம்
முன்னதாக, வியாழக்கிழமை நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி பாதியில் நிறுத்தபப்ட்ட நிலையில், வீரர்கள் தங்கள் கிரிக்கெட் உபகரணங்களுடன் மைதானத்தில் இருந்து பாதுகாப்பாகக் கிளம்பினர்.
"பதான்கோட்டில் அருகிலுள்ள தாக்குதல்கள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம்." என்று ஒரு வீரர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
மேலும், தரம்சாலாவிலிருந்து வீரர்களை வெளியேற்ற பிசிசிஐ சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.