
சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளார்.
மேலும், புதுடெல்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தை திறக்க அனுமதிக்குமாறு இந்திய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தத் துணிச்சலான அறிவிப்பை, அவர் தொடர்ச்சியான சமூக ஊடகப் பதிவுகள் மூலம் வெளியிட்டுளளார்.
மேலும், பலுசிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச அங்கீகாரம் மற்றும் பிராந்தியத்தில் ஐநா அமைதி காக்கும் படையின் தலையீட்டிற்கும் அழைப்பு விடுத்தார்.
பலோச் உரிமைகளுக்காக நீண்டகாலமாக வாதிடும் மிர் யார் பலோச், பாகிஸ்தான் பலுசிஸ்தானை ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
வெளியேற்றம்
பாகிஸ்தான் ஊழியர்கள் வெளியேற கோரிக்கை
மேலும் அனைத்து பாகிஸ்தான் ராணுவ மற்றும் நிர்வாகப் பணியாளர்களும் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
பலோச் போராளிகள் டேரா புக்தியில் உள்ள பாகிஸ்தானிய எரிவாயு நிலையங்களைத் தாக்கியதாகவும், தீவிரமான எதிர்ப்பைக் குறிக்கும் வகையில் மிர் யார் பலூச் கூறினார்.
பலுசிஸ்தானில் ஒரு இடைக்கால அரசாங்கம் மற்றும் ஒரு முறையான சுதந்திர விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், சர்வதேசத் தலைவர்களை கலந்துகொள்ள அழைப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு நடந்து வரும் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.