
ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 91.94% தேர்ச்சியுடன் அரசு பள்ளிகள் அசத்தல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், மார்ச் 3 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 8.21 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்களுள், தேர்வு முடிவுகளின் படி, தமிழகத்தில் மொத்தம் 95.03% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழ்காணும் இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்:
https://results.digilocker.gov.in
https://results.digilocker.gov.in
மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தேசிய தகவல் மையங்கள் மற்றும் அனைத்து அரசு நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை பார்க்கலாம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:#SunNews | #Top5Districts | #TNSchools | #TNPlus2Results pic.twitter.com/CawkXEFo0F
— Sun News (@sunnewstamil) May 8, 2025
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்!#SunNews | #Tamil | #12thResults | #ExamResults pic.twitter.com/4qDK5X0Hu7
— Sun News (@sunnewstamil) May 8, 2025
விவரங்கள்
தேர்வு முடிவுகள் படி, ஒரு அலசல்
இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.
மாணவிகள்: 96.70% தேர்ச்சி
மாணவர்கள்: 93.16%
தேர்ச்சி பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்:
அரசுப் பள்ளிகள்: 91.94%
அரசு உதவிப்பெறும் பள்ளிகள்: 95.71%
தனியார் பள்ளிகள்: 98.88%
சிறந்த ஐந்து மாவட்டங்கள்:
அரியலூர்- 98.82%
ஈரோடு- 97.98%
திருப்பூர்- 97.53%
கோவை- 97.48%
கன்னியாகுமரி- 97.01%
100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் (பாடம் வாரியாக):
தமிழ்- 135 பேர்
இயற்பியல்- 1,125 பேர்
வேதியியல்- 3,181 பேர்
கணிதம்- 3,022 பேர்
விலங்கியல்- 36 பேர்
உயிரியல்- 827 பேர்
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!#SunNews | #12thResults | #ExamResults pic.twitter.com/S89PKCZKZQ
— Sun News (@sunnewstamil) May 8, 2025