
பாகிஸ்தான் படங்கள், வெப் சீரீஸ்களை ஒளிபரப்புவதை நிறுத்த ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் அனைத்து கன்டென்ட்களையும் ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, அனைத்து ஓடிடி தளங்கள், ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு மத்திய அரசு ஒரு முறையான ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இந்தியா இலக்கு வைத்து வைத்து மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 ஐ மேற்கோள் காட்டி, இந்தியாவின் இறையாண்மையை சிறுமைப்படுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் கன்டென்ட் வெளியாவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள்
பாகிஸ்தான் திரைப்படங்களுக்கும் தடை
இலவச அல்லது கட்டண சேவைகளில் உள்ள அனைத்து பாகிஸ்தான் திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள், பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்களையும் நிறுத்துமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளிப்படையாக தளங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்புகளுக்கு இந்த தாக்குதலில் பங்கு இருப்பது தேசிய வந்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்புகள் தொடர்புடைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில் உள்ள ஒன்பது பயங்கரவாதத் தளங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.