ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர் 2': படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரன்வீர் சிங்கின் அபாரமான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்திய சினிமாவின் மிக விலையுயர்ந்த படங்களில் ஒன்றான இது, சுமார் 300 முதல் 475 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்திற்காக நடிகர் ரன்வீர் சிங் 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய வேடங்களில் நடித்துள்ள சஞ்சய் தத் 10 கோடி ரூபாயும், மாதவன் 9 கோடி ரூபாயும் பெற்றுள்ளனர். கதாநாயகி சாரா அர்ஜுன் மற்றும் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் ராம்பால் தலா 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைக்கதை
திரைக்கதை மற்றும் வசூல் விவரங்கள்
சுமார் 7 மணிநேர நீளம் கொண்ட இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டது. முதல் பாகம் 2025 டிசம்பரில் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. பஞ்சாபின் ஜஸ்கிரத் சிங் எப்படி லியாரியின் 'ஹம்சா'வாக மாறுகிறார் என்பதையும், தேச விரோத சக்திகளை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பதையும் அதிரடி காட்சிகளுடன் படம் விளக்குகிறது. நேற்று (மார்ச் 18) நடைபெற்ற சிறப்பு முன்னோட்டக் காட்சிகளின் போது தணிக்கை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் சில இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டாலும், ரசிகர்களின் ஆர்வம் குறையவில்லை. நகரங்களில் டிக்கெட் விலை 3000 ரூபாய் வரை விற்பனையானது. இப்படம் உள்நாட்டில் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து முந்தைய பாகத்தின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.