12 Sep 2025
சார்லி கிர்க் துப்பாக்கிச் சூடு வழக்கில் முக்கிய நபர் ராபின்சன் கைது
பழமைவாதச் செயற்பாட்டாளரான சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற வழக்கில், டைலர் ராபின்சன் என்ற 22 வயது நபர் உட்டாவில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலரை நெருங்கியது
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது.
ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி; இந்தியாவின் கையெழுத்துப் பிரதி மரபுக்கு புதிய ஊக்கம்
கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தொடங்கி வைத்தார்.
பிரபல கோயிலில் விஐபி தரிசனம் ரத்து: உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழு அதிரடி முடிவு
இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மதுரா ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயிலில், விஐபி தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி இன்று இரவு பதவியேற்க உள்ளதாக தகவல்
நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்க்கி, அந்நாட்டின் இடைக்காலப் பிரதமராக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) இரவு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளப் போராட்டத்தில் மாட்டிக் கொண்ட இந்திய வாலிபால் குழுவினர் பத்திரமாக மீட்பு
நேபாளத்தில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் சிக்கித் தவித்த இந்திய வாலிபால் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் குழு, இந்தியத் தூதரகத்தால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் KH237 படத்தில் இணைந்தார் தேசிய விருது பெற்ற சியாம் புஷ்கரன்! முழு விபரம்
நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படமான KH237 திரைப்படத்திற்கு, தேசிய விருது பெற்ற பிரபல எழுத்தாளர் சியாம் புஷ்கரன் கதை எழுதுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் ஜனநாயகனுக்கு நேரடி போட்டி; நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்தது அல்பேனியா; ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக நியமனம்
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் தனது ஒரே 1,000 சிசி மோட்டார் சைக்கிளை நிறுத்தும் சுஸுகி
சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் கட்டானா மாடலை அதன் வரிசையில் இருந்து அமைதியாக நிறுத்தியுள்ளது.
உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இடைநிறுத்திய ரஷ்யா
மூன்றரை ஆண்டுகால மோதலைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இராஜதந்திர முயற்சிகள் தேக்கமடைந்துள்ளதால், உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
உயர் பாதுகாப்புப் பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தடை; உச்ச நீதிமன்றம் அதிரடி
உச்ச நீதிமன்றம், தனது வளாகத்தின் உயர் பாதுகாப்புப் பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்குப் புதிய தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 14 முதல் வைஷ்ணோ தேவி யாத்திரை மீண்டும் தொடங்கும்
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 19 நாட்கள் இடைநிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை செப்டம்பர் 14 முதல் மீண்டும் தொடங்கும்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
QUAD உச்சிமாநாட்டிற்காக டிரம்ப் இந்தியா வரக்கூடும்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் நாற்கர பாதுகாப்பு உரையாடல் (குவாட்) தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தரக்கூடும், என இந்தியாவிற்கான தூதர் வேட்பாளர் செர்ஜியோ கோர், செனட் உறுதிப்படுத்தல் விசாரணையில் சூசகமாக தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 2.07% ஆக உயர்வு; உணவுப் பணவீக்கத்திலும் மாற்றம்
இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் 2.07% ஆக உயர்ந்துள்ளது.
'ராமாயணம்' படத்தில் நடிப்பதனால் சைவ உணவைப் பின்பற்றும் ரன்பீர் கபூர்
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'ராமாயணம்' படத்தில் ராமராக நடிக்க பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.
செப்டம்பர் 15 காலக்கெடு; காலதாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்தால் உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும்?
2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்குத் தாக்கல் (ITR) செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15, 2025 அன்று முடிவடைகிறது.
இந்த ஆண்டு புதிதாக 11 நிறுவனளுக்கு யுனிகார்ன் அந்தஸ்து; இந்தியாவில் யூனிகார்ன் மொத்த எண்ணிக்கை 73 ஆக உயர்வு
ஏஎஸ்கே பிரைவேட் வெல்த் ஹுரூன் இந்தியா யூனிகார்ன் மற்றும் எதிர்கால யூனிகார்ன் அறிக்கை 2025இன் படி, இந்தியாவின் ஸ்டார்ட்அப் எக்கோ சிஸ்டம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 11 புதிய நிறுவனங்கள் யூனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளன.
புதிய கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர் இந்தியாவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் என்னென்ன?
கவாஸாகி நிறுவனம், 2026 மாடல் புதிய நிஞ்ஜா இசட்எக்ஸ்-10ஆர் (Ninja ZX-10R) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிசிசிஐ தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார், தேர்தல் இல்லை: அருண் துமல்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவர் அருண் துமல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் புதிய தலைவரை "ஒருமனதாக" நியமிக்கும் என்று கூறியுள்ளார்.
மோதல்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நாளை பிரதமர் மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மணிப்பூர் செல்லவுள்ளார்.
இந்த புதிய ஐபோன் accessory-இன் விலை இந்தியாவில் ₹5,900: அதன் பயன்பாடு என்ன?
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களுக்கான புதிய துணைப் பொருளான கிராஸ்பாடி ஸ்ட்ராப்பை (Crossbody Strap) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்திற்குக் காரணம் நீர்க் கசிவுதான்? பிளாக் பாக்ஸ் தகவலைக் கோரி அமெரிக்க வழக்கறிஞர் மனு
ஏர் இந்தியாவின் ஏஐ171 (AI171) விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக வாதாடும் ஒரு மூத்த அமெரிக்க வழக்கறிஞர், பிளாக் பாக்ஸ் என அழைக்கப்படும் விமானத் தரவுப் பதிவு (FDR) தகவலைப் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (FOIA) கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஷேர் பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ₹18,000 கோடி மதிப்புள்ள ஷேர் பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது.
'நீதிபதியின் அறை வெடிக்கும்': டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உடனடியாக மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நேபாளக் கலவரம்: எல்லைக்கு அருகில் இந்திய யாத்ரீகர்கள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டனர்
நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய யாத்ரீகர்கள் குழு வியாழக்கிழமை தாக்கப்பட்டது.
இன்ஸ்டா ட்ரென்ட்ஸ்: 'Nano Banana' 3D ட்ரெண்ட் என்றால் என்ன? தெரிந்துகொள்வோம்
சமூக ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன்னர் ஜிபிலி இமேஜ்கள் ட்ரெண்ட் ஆனது.
ஈபிஎஃப்ஓ 3.0: தீபாவளிக்குள் பிஎஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி அறிமுகம் எனத் தகவல்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ), தனது சேவைகளை மேம்படுத்தி, ஈபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய டிஜிட்டல் தளத்தை தீபாவளி 2025 க்குள் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
தனது வீட்டை இலவச பள்ளியாக மாற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்
படத்தொழிலில் மட்டுமல்லாது, சமூக சேவையிலும் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கியுள்ள நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ், தனது சொந்த வீட்டை குழந்தைகளுக்கான இலவச கல்விப் பள்ளியாக மாற்றியுள்ளார்.
'பாலஸ்தீனம் என்ற நாடு இருக்காது' என எச்சரிக்கும் இஸ்ரேல்
மேற்குக் கரை நிலத்தை வெட்டும் சர்ச்சைக்குரிய குடியேற்ற விரிவாக்கத் திட்டத்துடன் தொடர ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், "பாலஸ்தீன நாடு இருக்காது" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
போத்தீஸ் நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் 27 ஆண்டுகள் சிறை
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
லிச்சி பழத்தை போலவே தோற்றமுள்ள ரம்புட்டானின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்வோமா?
தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வெப்பமண்டல பழமான ரம்புட்டான், அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக மிகவும் பிரபலமாகி வருகிறது.
மீண்டும் அதிகரிப்பு; இன்றைய (செப்டம்பர் 12) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, கடந்த இரண்டு நாட்கள் நிலையாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) மீண்டும் உயர்வைச் சந்தித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சார்லி கிர்க்கின் படுகொலையில் சந்தேக நபரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது FBI
உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் கொல்லப்பட்டதில் சந்தேகிக்கப்படும் ஒருவரின் புதிய புகைப்படங்களை FBI வியாழக்கிழமை வெளியிட்டு பொதுமக்களின் உதவியைக் கோரியது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்கிறார்
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று செப்டம்பர் 12 ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இந்தியாவின் சீனாவுடனான நெருக்கம் கவலையளிக்கிறது: புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர் கருத்து
இந்தியா, அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடாகும் என்பதைக் குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியா கோர், இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டுவது கவலையளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அரிவாளால் தலை துண்டிக்கப்பட்டு கொலை; குடும்பத்தினர் முன்பு அரங்கேறிய பயங்கரம்
செப்டம்பர் 10 ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் மோட்டலில் நடந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
11 Sep 2025
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தால் 30 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக Zupee அறிவிப்பு
பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளைக் கொண்ட ஜூப்பி (Zupee) நிறுவனம், தனது 170 ஊழியர்களை, அதாவது மொத்தப் பணியாளர்களில் சுமார் 30% பேரை, பணி நீக்கம் செய்வதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 11) அறிவித்துள்ளது.
மறைந்த அபிநய சரஸ்வதி சரோஜா தேவிக்கு மாநில அரசின் உயரிய விருது அறிவிப்பு
கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது, மறைந்த புகழ்பெற்ற நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை பி. சரோஜா தேவி ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட உள்ளது.
சுஸூகியின் 1000சிசி கட்டானா சூப்பர் நேக்கட் மோட்டார்சைக்கிள் விற்பனை இந்தியாவில் நிறுத்தம்
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 1000சிசி கட்டானா மாடலை இந்தியச் சந்தையில் இருந்து நிறுத்தியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும்: மத்திய அமைச்சர்
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நவம்பர் 2025 க்குள் இறுதி செய்யப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் கடுமையாக உயர்வு; வேலையின்மை விகிதமும் அதிகரிப்பு
எரிபொருள், மளிகைப் பொருட்கள், பயணம் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அமெரிக்காவில் கடந்த மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் சச்சின் டெண்டுகள் இருக்கிறாரா? உண்மை இதுதான்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்குத் தான் பரிசீலிக்கப்படுவதாகப் பரவி வரும் வதந்திகளை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.
SonyLivதொடரில் தியாகராஜ பாகவதராக நடிப்பது சாந்தனுவா?
சோனிலைவ்வில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள தொடர் ஒன்றில் சாந்தனு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசு நிதி, வீடு உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை நீக்கியது இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் மற்றும் அரசு நிதியுதவி வசதிகளை ரத்து செய்யும் மசோதாவை இலங்கை நாடாளுமன்றம் செப்டம்பர் 10 அன்று நிறைவேற்றியது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சைபர் தாக்குதலால் JLR ஒரு நாளைக்கு ₹60 கோடி இழக்க நேரிடும்
டாடா மோட்டார்ஸின் பிரிட்டிஷ் சொகுசு துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) ஒரு பெரிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு போல் டீசலில் ஐசோபுடனால் கலப்பு; சோதனை நடந்து வருவதாக நிதின் கட்கரி அறிவிப்பு
மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கும், பழைய வாகனங்களை அழிப்பதற்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்திய வாகனத் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தன்னுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தந்தையை பணியமர்த்திய 16 வயது இந்திய ஏஐ விஞ்ஞானி ராகுல்
கேரளாவைச் சேர்ந்த 16 வயதான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) விஞ்ஞானி ராகுல் ஜான் அஜு, தனது கண்டுபிடிப்புகளால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
'லோகா' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 'காந்தா' படத்தை தள்ளி வைத்த துல்கர் சல்மான்!
துல்கர் சல்மான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'காந்தா' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய திரைப்பட விருதுகள் 2025 விழா நடைபெறும் தேதி வெளியானது
ஆகஸ்ட் 1 ஆம் தேதி 71 வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்த நிலையில், விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற உள்ளது.
மூளை உண்ணும் அமீபிக் நோயால் அதிகரிக்கும் பாதிப்பு; கேரளாவில் ஆறாவது நபர் உயிரிழப்பு
அரிதான மற்றும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் மூளை தொற்றுநோயான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Amoebic Meningoencephalitis) நோயால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார்.
2 மணி நேரம் வேர்க்கவேர்க்க விமானத்தில் தவித்த பயணிகள்; இறுதியில் விமான கோளாறு என இறக்கிவிட்ட ஏர் இந்தியா
புதன்கிழமை மாலை டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது
மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
நேபாள பிரதமர் பதவிக்கான சிறந்த வேட்பாளராக ஒரு பொறியாளர் பெயரும் அடிபடுகிறது; யார் அவர்?
ஊழலுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் நாட்டையே உலுக்கியதால், நேபாளம் தலைமை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது.
பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி
நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தனது பதவி நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் பண்டைய வாழ்வின் வலுவான அடையாளத்தை நாசா கண்டறிந்துள்ளது
நாசாவின் Perseverance Rover செவ்வாய் கிரகத்தில் விசித்திரமான "சிறுத்தை-புள்ளி" பாறைகளைக் கண்டுபிடித்துள்ளது.
அமிர்கான்-லோகேஷ் கனகராஜின் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம் கைவிடப்பட்டதா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர் கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சூப்பர் ஹீரோ' திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றம், ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வியாழக்கிழமை (செப்டம்பர் 11) மறுத்துவிட்டது.
'காந்தாரா' இரண்டாம் பாகம், அமேசானுக்கு ₹125 கோடிக்கு விற்கப்பட்டது; விவரங்கள்
காந்தாராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த பாகமான 'காந்தாரா: அத்தியாயம் 1' என்ற திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ ₹125 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பழைய வாகனங்களை அழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகனங்களை அழிப்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கும் நுகர்வோருக்குச் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கும்படி வாகன உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார்.
19 மாதங்களுக்கு பின்னர் தந்தையை சந்தித்தார் இளவரசர் ஹாரி; மீண்டும் இணைகிறதா அரச குடும்பம்?
சசெக்ஸ் டியூக் இளவரசர் ஹாரி, சமீபத்தில் தனது தந்தை மன்னர் சார்லஸ் III ஐ லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் "தனியார் தேநீர்" விருந்தில் சந்தித்தார்.
Pap smear மூலம் கருப்பை புற்றுநோய் கண்டறிய முடியுமா? சில பொதுவான கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்
கருப்பை (Ovarian) புற்றுநோய் தொடர்பான தவறான நம்பிக்கைகள், பல்வேறு பெண்களில் தவறான அறிகுறிகளையும், தாமதமான நோயறிதலையும் ஏற்படுத்துகின்றன.
செப்டம்பர் 15 முதல் யுபிஐ பரிவர்த்தனைக்கான வரம்பு அதிகரிப்பு; இவர்களுக்கு மட்டும்!
தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இளைஞர்களே அலெர்ட்! எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்` (எஸ்எஸ்சி), பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான சமன்படுத்தும் (normalization) முறையில், புதிய சம சதவிகித (equipercentile) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
"இஸ்ரேலின் 9/11 தருணம்": தோஹா தாக்குதல் குறித்து நெதன்யாகு
கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அதிகாரிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரித்தார்.
ஆசிய கோப்பை 2025: சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் அடுத்த போட்டியில் சேர்க்கப்பட மாட்டாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் தேர்வுக்குழுவின் கொள்கையை நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; அரசியல்வாதியாக இருக்கவே தகுதியற்றவர் என டாக்டர் ராமதாஸ் காட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இரண்டாவது நாளாக மாற்றமில்லை; இன்றைய (செப்டம்பர் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை செப்டம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.
'உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்': சிறுபான்மையினர் கருத்துக்கு சுவிட்சர்லாந்திற்கு இந்தியா பதிலடி
இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
நேபாள இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி சம்மதம்
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' என்ற பட்டத்தை பயன்படுத்த முடியாது: சுகாதார ஆணையம் முடிவு
பிசியோதெரபிஸ்டுகளுக்கான "டாக்டர்" என்ற பட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க, புதிய பிசியோதெரபி பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர சுகாதார சேவைகள் இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய ஆரக்கிளின் லாரி எலிசன்
ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் தனது வாழ்க்கையில் முதல் முறையாக உலகளாவிய செல்வந்தர் தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளார்.
இந்த தேதியில் நீங்கள் HDFCயின் UPI சேவைகளைப் பயன்படுத்த முடியாது
HDFC வங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி அதன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் அரசியல் கொலை; டிரம்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார்
அமெரிக்காவின், டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற இளைஞர் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான கன்சர்வேடிவ் ஆர்வலர் சார்லி கிர்க், புதன்கிழமை உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது கொல்லப்பட்டார்.