
Pap smear மூலம் கருப்பை புற்றுநோய் கண்டறிய முடியுமா? சில பொதுவான கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
கருப்பை (Ovarian) புற்றுநோய் தொடர்பான தவறான நம்பிக்கைகள், பல்வேறு பெண்களில் தவறான அறிகுறிகளையும், தாமதமான நோயறிதலையும் ஏற்படுத்துகின்றன. இந்தப் புற்றுநோயைச் சுற்றியுள்ள சில பொதுவான கட்டுக்கதைகளை (myths) பற்றி தெரிந்து கொள்வதால், பெண்கள் இந்த புற்றுநோய் கண்டறிதலின் முக்கியத்துவத்தையும், ஆரம்பகாலத்தில் அதை தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியம் என்பதையும் அறிய உதவும்.
கட்டுக்கதைகள் #1
பொதுவான கட்டுக்கதைகளும் உண்மைகளும்- 1!
கருப்பை புற்றுநோய் வயதான பெண்களுக்கு மட்டுமே ஏற்படும்: இது தவறு. வயதுடன் ஆபத்து அதிகரிக்கலாம், ஆனால் 20 மற்றும் 30 வயதுடைய பெண்களும் இந்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. குறிப்பாக, ஜெர்ம்செல் மற்றும் ஸ்ட்ரோமல் கட்டிகள் போன்ற துணை வகைகள் இளம் பெண்களில் காணப்படும். புற்றுநோய் வளரும் வரை அறிகுறிகள் இருப்பதில்லை: ஆரம்ப கட்டத்திலேயே சில நுணுக்கமான அறிகுறிகள் ஏற்படலாம்—வயிறு வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வயிற்று வலி, விரைவில் நிறைவான உணர்வு போன்றவை. இது மற்ற பொதுவான பிரச்சனைகளாகப் புரிந்துகொள்ளப்படும் என்பதால்தான் விழிப்புணர்வு மிக முக்கியம்.
கட்டுக்கதைகள் #2
பொதுவான கட்டுக்கதைகளும் உண்மைகளும்- 2!
பேப் ஸ்மியர் பரிசோதனை கருப்பை புற்றுநோயைக் கண்டறியும்: பேப் ஸ்மியர் பரிசோதனை கருப்பை புற்றுநோயை(ovarian cancer) கண்டறியாது; இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை (cervical cancer) கண்டறியும் பரிசோதனை. தற்போதைய நிலையில் கருப்பை புற்றுநோய்க்கு நம்பகமான ஸ்கிரீனிங் சோதனை இல்லை. குடும்ப வரலாறு இருந்தால் மட்டுமே ஆபத்து: மரபணு மாற்றங்கள் (BRCA1/BRCA2) மற்றும் குடும்ப வரலாறு முக்கியமான காரணிகளாக இருந்தாலும், பெரும்பாலான நோயாளிகளுக்கு இவை எதுவும் இருக்காது. உடல் பருமன், எண்டோமெட்ரியோசிஸ், நீண்டகால ஹார்மோன் சிகிச்சை போன்றவை கூட புற்றுநோயுக்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும்.