LOADING...
தனது வீட்டை இலவச பள்ளியாக மாற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்
வீட்டை கல்வி சேவைக்கு பயன்படுத்த போவது குறித்து ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்

தனது வீட்டை இலவச பள்ளியாக மாற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 12, 2025
12:14 pm

செய்தி முன்னோட்டம்

படத்தொழிலில் மட்டுமல்லாது, சமூக சேவையிலும் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கியுள்ள நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ், தனது சொந்த வீட்டை குழந்தைகளுக்கான இலவச கல்விப் பள்ளியாக மாற்றியுள்ளார். தற்போது 'பென்ஸ்', 'ஹண்டர்', 'புல்லட்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், இதற்கிடையே 'காஞ்சனா 4' படத்தையும் இயக்கி, நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமூகத்தின் நலனுக்காக இயங்கும் தனது அறக்கட்டளை மூலம், பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வரும் அவர், தற்போது தனது முதல் வீட்டை கல்வி சேவைக்கு பயன்படுத்த போவது குறித்து ஒரு உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பேட்டி

"என் சேமிப்பில் வாங்கிய முதல் வீடு இது"

"காஞ்சனா 4 படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் முன்பணத்தை வைத்து என் வாழ்க்கையின் முதல் வீட்டை இலவசக் கல்வி பள்ளியாக மாற்றியுள்ளேன். இந்த வீடு எனக்கு மிகவும் நெருக்கமானது". "டான்ஸ் மாஸ்டர் காலத்தில் என் சேமிப்பில் வாங்கிய முதல் வீடு இது. பின்னர் அதை ஒரு அனாதை இல்லமாக மாற்றி, நாங்கள் வாடகை வீட்டுக்கு சென்றோம். இன்று, அந்த இல்லத்தில் வளர்ந்த என் குழந்தைகள் வேலைக்கு சென்றுவிட்டார்கள். இப்போது, அந்த வீட்டை மீண்டும் ஒரு நல்ல நோக்கத்திற்காக அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறேன்." என்றார். மேலும், இந்த புதிய பள்ளிக்கான முதல் ஆசிரியராக, தனது அறக்கட்டளையில் வளர்ந்த ஒரு பெண் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post