
இந்த ஆண்டு புதிதாக 11 நிறுவனளுக்கு யுனிகார்ன் அந்தஸ்து; இந்தியாவில் யூனிகார்ன் மொத்த எண்ணிக்கை 73 ஆக உயர்வு
செய்தி முன்னோட்டம்
ஏஎஸ்கே பிரைவேட் வெல்த் ஹுரூன் இந்தியா யூனிகார்ன் மற்றும் எதிர்கால யூனிகார்ன் அறிக்கை 2025இன் படி, இந்தியாவின் ஸ்டார்ட்அப் எக்கோ சிஸ்டம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு 11 புதிய நிறுவனங்கள் யூனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளன. இதன் மூலம், இந்தியாவின் மொத்த யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. ஒரு யூனிகார்ன் என்பது 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக மதிப்புள்ள ஒரு தனியார் நிறுவனமாகும். இந்த ஆண்டு புதிதாக இணைந்த நிறுவனங்களில், திவ்யங்க் துராக்கியா நிறுவிய ஏஐ.டெக் நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் மதிப்புடன் முன்னணியில் உள்ளது. நவி டெக்னாலஜிஸ், ஜஸ்பே போன்ற ஃபின்டெக் நிறுவனங்களும், ரேபிடோ போன்ற ஷேர்ட் எகானமி நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
பெங்களூர்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மையமாக திகழும் பெங்களூர்
இந்தியாவில் ஸ்டார்ட்அப்களின் மையமாக பெங்களூர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு 26 யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 70 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு அடுத்தபடியாக, டெல்லி-என்சிஆர் மற்றும் மும்பை முறையே 12 மற்றும் 11 யூனிகார்ன் நிறுவனங்களைக் கொண்டுள்ளன. இந்த அறிக்கை, இந்தியாவின் ஸ்டார்ட்அப் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும் சுட்டிக் காட்டுகிறது. ருச்சி கல்ரா மற்றும் வினீதா சிங் போன்ற பெண் நிறுவனர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றனர். இருப்பினும், புதிய ஆன்லைன் கேமிங் சட்டம், 2025இன் காரணமாக, ட்ரீம்11, கேம்ஸ்24x7 உள்ளிட்ட நான்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தங்கள் யூனிகார்ன் தகுதியை இழந்துள்ளன.